விவசாயிகளுக்கு ஆறுதலாக தக்காளிப் பழங்களை பழுக்க வைக்காமல் தடுக்கும் புது டெக்னிக் கண்டுபிடிப்பு!

விவசாயிகளுக்கு ஆறுதலாக தக்காளிப் பழங்களை பழுக்க வைக்காமல் தடுக்கும் புது டெக்னிக் கண்டுபிடிப்பு!
Published on

நெடுங்காலமாக தக்காளி விவசாயிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று கூடுதல் விரைவுடன் அதன் கனிந்து பழுக்கும் தன்மை. இந்த தன்மையால் வெயில் காலங்களில் ஏராளமான தக்காளி கூடைகள் அழுகி முடை நாற்றமெடுத்து குப்பைகளில் வீசப்படும் நிலை நீடிக்கிறது. அத்துடன் அவற்றை விளைவிக்கும் விவசாயிகளும் கூட உபரியாக விளையும் தக்காளிகளை சேமிப்புக் கிடங்கில் கெட்டுப் போகாமல் சேமித்து வைக்க உரியதொரு வழிமுறை கிடைக்காமல் திண்டாடி வந்தனர். அரசின் குளிர்பதன ஸ்டோரேஜ் வசதிகள் பரவலான வகையில் அனைத்து விவசாயி களுக்கும் பயன் தரத்தக்கதாக இன்னமும் கூட அமையவில்லை. எனவே தக்காளி போன்ற விரைவில் பழுத்து வீணாகும் பொருட்களை உற்பத்தி செய்வோர் மிகுந்த சிரமத்தில் இருந்து வந்தனர். இப்போது அவர்களது கவலைகளைக் களையும் விதத்தில் ஹைதராபாத் விஞ்ஞானிகள் ஒரு புதிய தொழில்நுட்பத்தைக் கண்டடைந்துள்ளனர்.

பழங்களை பழுக்க வைப்பதைக் கட்டுப்படுத்துவதற்கான புது வழிமுறைகளை இந்த ஆய்வு அடையாளம் காட்டுகிறது

ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் (UoH) தாவர விஞ்ஞானிகள் குழு, எத்திலீன் உயிரியக்கவியல் தடுப்பு மூலம் தக்காளி பழங்கள் பழுக்க வைக்கும் ஒரு பாதுகாக்கப்பட்ட வழிமுறையை அடையாளம் கண்டு, தங்களது கூட்டு ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளது.

இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது பழங்கள் மற்றும் காய்கறிகளின் போக்குவரத்து மற்றும் சேமிப்பின் போது அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்க மிகவும் உதவிகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆராய்ச்சி முடிவானது சிறந்த ரகங்களை உருவாக்குபவர்களுக்கும் புதிய மற்றும் உயர்தர விவசாயப் பொருட்களை விரும்பும் விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனளிக்கும் விதமாக உள்ளது. அத்துடன் இந்த பயனுள்ள உயிரி தொழில்நுட்ப உத்திகள் பழங்களின் சுவை, நிறமி குவிப்பு மற்றும் அடுக்கு வாழ்க்கை போன்ற பழங்களைப் பழுக்க வைக்கும் பண்புகளை மேம்படுத்துகின்றன.

UoH இன் டாக்டர் ராகுல் குமார் தலைமையிலான குழு, டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அருண் கே ஷர்மாவுடன் இணைந்து, பல பழுக்காத தக்காளிகளில் அதிக அளவு மெத்தில்கிளையாக்சால் (MG) இருப்பதைக் கண்டறிந்தது, இது தக்காளியைப் பழுக்க வைக்காமல் தடுக்கிறது. இந்த புதிய விதமான ஆராய்ச்சி கண்டு பிடிப்புகள் சமீபத்தில் அமெரிக்கன் சொஸைட்டி ஆஃப் பிளாண்ட் பயாலஜிஸ்ட்ஸ் எனும்  தாவரவியல் ஆய்வு சஞ்சிகையில் வெளியிடப்பட்டது. இது  தனது புதுமை மற்றும் முக்கியத்துவத்தின் காரணமாக அமெரிக்காவால் வெளியிடப்பட்ட சிறந்த அறிவியல் இதழ்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சதைப்பற்றுள்ள பழங்களில் பழுக்க வைக்கும் பண்புகளை மேம்படுத்த உதவும் திட்டங்களை ஒழுங்கு படுத்தும் ஒரு புதிய வழிமுறையை இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com