தற்போது விரிவடைந்து இருக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உண்மை எது, பொய் எது என்பதை கண்டுபிடிப்பதே மிகப்பெரிய சிக்கலாக மாறி இருக்கிறது. ஏஐ சாட் பாட்கள், ஏஐ இயந்திரங்கள் மற்றும் டீப் பேக் வீடியோக்கள் போன்றவை பொய்யை உண்மையை போல் காட்சிப்படுத்துகின்றன. இதனால் சர்வதேச அளவில் உண்மைக்கும் பொய்க்கும் என நம்பகத்தன்மையை கண்டறிய உதவும் தொழில் நுட்பங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு முயற்சியாக ஏஐ தொழிற்ப வல்லுநர் ஷாம் ஆல்பன் என்பவர் மனிதர்கள் என்ற நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சர்வதேச ஐடியை அமல்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார். இதற்காக மனிதர்களின் கருவிழிகள் ஸ்கேன் செய்யப்பட்டு உண்மையான மனிதரா என்று அவர்கள் கண்டறியப்படுவார்கள் என்று ஷாம் ஆல்பன் தெரிவித்து இருக்கிறார்.
இந்த ஐடி வருங்காலத்தில் உலகின் பிரதான ஐடியாக உருவெடுக்கும் என்றும், இதன் மூலம் தரவுகள் திரட்டப்படாது என்றும், அவை உண்மையான மனிதரா என்பதை கண்டறிய மட்டும் உதவும் என்றும் பிறகு அவை உடனுக்குடன் டெலிட் செய்யப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். விரைவில் இது ஏர்போர்ட்டுகளில் அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், இது சர்வதேச பாஸ்போர்டிற்கு நிகரான அம்சமாக வருங்காலத்தில் உருவெடுக்கும்.
இந்த நடவடிக்கை முழுக்க முழுக்க மனித பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தயாரிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இருக்கக்கூடிய ஆபத்துகளை கலைத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இவ்வாறான ஐடி உதவும் என்று தெரிவித்திருக்கிறார்.