கர்நாடக பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ டீச்சர்.

கர்நாடக பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ டீச்சர்.

ற்போதைய தொழில்நுட்ப யுகத்தில் அனைத்துமே டிஜிட்டல் துறைக்கு மாறி வருகிறது. அந்த வகையில், மனிதர்களைப் போலவே சிந்தித்து செயல்படும் ஹியூமனாய்டு ரோபோக்களை உருவாக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. 

இந்நிலையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க கர்நாடக மாநிலத்தில் ஒரு ஹியூமனாய்டு ரோபோவை இயற்பியல் பேராசிரியர் ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த ரோபோவுக்கு 'சிக்ஷா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் முறையே தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது எனலாம். அதுவும் கொரோனா தொற்று பரவிய காலகட்டத்தில், ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையம் வழியாகவே பாடத்தை நடத்தியது, நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இவ்வாறு இணையதளக் கல்வி மேம்பட்டுவரும் காலகட்டத்தில், இந்த சிக்ஷா ரோபோவுக்கு கர்நாடகாவின் சிர்சி மாவட்டத்தில் வசிக்கும், அக்ஷய் மசேல்கர் என்ற பேராசிரியர் உயிர் கொடுத்துள்ளார். 

இந்த ரோபோ, மிகவும் வித்தியாசமான முறையில் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மிகவும் நேர்த்தியாக சீருடை அணிந்து கொண்டு, இரட்டை ஜடையுடன், கழுத்தில் ஐடி கார்டு போட்டுக் கொண்டு, பார்ப்பதற்கு அரசு பள்ளி மாணவியைப் போலவே காட்சியளிக்கும் இந்த ரோபோவால், நான்காம் வகுப்பு வரை பாடம் எடுக்க முடியுமாம். 

இதனால் ஆங்கில ரைம்ஸ், கன்னட ரைம்ஸ், வாரத்தின் மாதத்தின் பெயர்கள், போன்ற விஷயங்களையும் சொல்ல முடியும். 

"இணையம் வழியாக பாடம் கற்பிக்கும் முறையானது, சொல்லும் அளவுக்கு இன்ட்ராக்டிவாக இல்லை என்பது போல் நான் உணர்ந்தேன். அதனால்தான் இந்த ரோபோவை வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. நீங்கள் நினைக்கும் அளவுக்கு இது ஒன்றும் அதிநவீன தொழில்நுட்பத்தில் செய்யப்பட்ட ரோபோ இல்லை. ஊரக பகுதியில் இருக்கும் மாணவர்களுக்குள் நிலவும், கல்வி சார்ந்த இடைவெளியை குறைக்கும் விதமாகத்தான், இதை நான் வடிவமைத்துள்ளேன்" என்கிறார் பேராசிரியர் அக்ஷய். 

'A friend from future' என செல்லமாக அழைக்கப்படும் இந்த ரோபோ, மந்தமாக செல்லும் வகுப்புகளையும் அனைவரும் விரும்பத்தக்க வகையில் எடுக்கும் விதமாக ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த ரோபோவை பயன்படுத்தி கல்லூரி மாணவர்களுக்கும் பாடம் நடத்தும் முயற்சியில் பேராசிரியர் அக்ஷய் இறங்கியுள்ளார். 

தன்னைப் போல் ஒரு ஹியூமனாயாடு ரோபோ எப்படி உருவாக்க வேண்டும் என்பதையும் இந்த ரோபோவே கற்றுக் கொடுக்கிறதாம். இதனால் மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் பாடத்தை கவனிப்பதாகக் கூறுகிறார்கள். கற்றல் துறையில் இதை அடுத்த மைல்கல்லாக அனைவரும் புகழ்ந்து வருகிறார்கள். 

கல்வியில் இதுபோன்ற அடுத்த கட்ட நகர்வை நாம் நிச்சயம் பாராட்டி தான் ஆக வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com