ஆதார் கார்டு அப்டேட் செய்து விட்டீர்களா? புது விதமான ஸ்கேம்!

Aadhaar card Scam
Aadhaar card Scam

தற்போதைய நவீன யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடக்கும் சைபர் குற்றங்களில் சிக்கி பலர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் மக்களின் ஆதார் கார்டை பயன்படுத்தி மிகப்பெரிய மோசடி ஒன்று நடந்து வருகிறது. 

சமீபகாலமாகவே பலரது whatsapp மற்றும் ஈமெயில் கணக்குகளுக்கு உங்களின் ஆதார் கணக்கை அப்டேட் செய்யுமாறு கூறி ஒரு லிங்க் அனுப்பப்படுவதாக சைபர் கிரைம் தடுப்புப் பிரிவுக்கு புகார்கள் வந்துள்ளன. இதைத்தொடர்ந்து அவர்கள் தீவிரமாக விசாரித்த போதுதான் இதில் ஸ்கேமர்கள் நடத்தும் மோசடி பற்றி தெரிய வந்தது. 

ஒருவேளை நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை அப்டேட் செய்வதற்கு உங்களுடைய ஆவணங்களை பகிரும்படி வாட்ஸ் அப்பில் மெசேஜ் அல்லது இமெயில் வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள். ஏனென்றால் இப்படிப்பட்ட மெசேஜ்கள் மோசடிக்காரர்களின் வேலையாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் உங்களின் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் அதற்காக அதிகாரப்பூர்வமாக இருக்கும் வெப்சைட்டில் சென்று அப்டேட் செய்யுங்கள். அல்லது உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்றும் உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்யலாம். 

அதேபோல ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என வாட்ஸ்அப் அல்லது இமெயில் மூலமாக யாருக்கும் தெரிவிக்கப்படாது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதற்காக உங்களுடைய முகவரி, இருப்பிட, அடையாள சான்று போன்ற மிக முக்கிய ஆவணங்களை பகிர்ம்படியும் கேட்பதில்லை. இவ்வாறு உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பகிரும்படி ஏதாவது லிங்க் வந்தால் அதை நம்பி எதையும் பகிர வேண்டாம். 

பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உங்கள் ஆதார் கார்டை நீங்கள் அப்டேட் செய்வதே போதுமானது. ஆனால் இதுவும் கட்டாயம் இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். எனவே தேவையில்லாமல் இணையத்தில் உங்கள் தகவல்களை பகிர்ந்து மோசடிக்காரர்களின் வலையில் சிக்கி விடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com