இனி ஒரே நேரத்தில் விவசாயமும் மின்சாரமும்.

இனி ஒரே நேரத்தில் விவசாயமும் மின்சாரமும்.
Published on

க்ரிவோல்டாய்க்ஸ் என்ற முறையைப் பயன்படுத்தி, ஒரே நேரத்தில் மின் உற்பத்தியும், விவசாயமும் செய்ய முடியும். இதனால் விவசாயிகள் தங்களின் வருமானத்தை அதிகரிக்கலாம். 

ஜப்பான், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகளில் அக்ரிவோல்டாய்க்ஸ் என்ற முறையான, விவசாய நிலங்களுக்கு மேல் சோலார் பேனல்களைப் பொருத்தும் தொழில்நுட்பம் அதிகரித்து வருகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகையில் 58 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த துறையையே நம்பி இருக்கின்றனர். 

சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்ய, வெட்டவெளிகளில் சில நாடுகளில் சோலார் பேனல்களை நிறுவுகின்றனர். அவ்வாறு வெட்டவெளிகளில் நிறுவப்படும்போது அதன் மேல் அதிகமாக தூசி படிந்து, மின்சார உற்பத்தி வெகுவாக குறைகிறது. எனவே தண்ணீரைப் பயன்படுத்தி சோலார் பேனல்களை அவ்வப்போது சுத்தம் செய்து வந்தனர். அவ்வாறு சுத்தம் செய்யும்போது அதற்கு பயன்படுத்திய தண்ணீர் வீணாக நிலத்தில் சிந்தியது. அப்போதுதான் ஒரு யோசனை தோன்றியது "சோலார் பேனல்களுக்கு அடியில் தாவரங்களை நட்டால், நிலத்தில் வீணாக சிந்தும் தண்ணீரை அவை பயன்படுத்திக் கொள்ளுமே" என எண்ணினர்

இத்தகைய முறையில் இரட்டை பயன்பாடு கொண்டு சூரியத் தகடுகள் சிறந்ததாக அமைந்தது. தற்போது அக்ரி-வோல்ட்டாய்க்ஸ் எனப்படும் இந்த விளைநிலங்களுக்கு மேல் சோலார் தகடுகளை பொருத்தும் திட்டமானது நல்ல வரவேற்பை பெற்று, வெற்றியும் கண்டுள்ளது. 

தொடக்கத்தில், அக்ரிவோல்ட்டாய்க்ஸ் மின் உற்பத்தி திட்டத்திற்காக நிலங்களை பயன்படுத்தும்போது, முதலில் அதன் மேல் மண் அகற்றப்பட்டு, சோலார் பேனல்கள் அமைப்பதற்கான கான்கிரீட் கட்டுமானம் பொருத்தப் பட்டது. இந்த முறையில் விவசாய உற்பத்தி குறைவாக இருந்தாலும், மின் உற்பத்தியானது அதிகமாக இருந்தது. எனவே விவசாயப் பயன்பாட்டை அதிகரிக்க, சோலார் தகடுகள் பூமியிலிருந்து ஏழு அடி உயரத்தில் நிறுவப்பட்டு, விவசாய பயன்பாட்டிற்கு நிலத்தில் எவ்வித இடையூறுமில்லாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. மழைநீர் மற்றும் சூரிய ஒளி தாவரங்களுக்குக் கிடைக்க ஒவ்வொரு சோலார் பேனல்களும் மூன்று அடி இடைவெளியில் பொருத்தப்படுகிறது. 

விவசாய நிலங்களில் விவசாயம் மட்டும் செய்வதை விட, சோலார் பேனர்களுக்கு மத்தியில் விவசாயம் செய்வது நல்ல லாபகரமானது என்கின்றனர். ஆனால் சோலார் பேனல்களுக்கு அடியில் எல்லா விதமான பயிர்களையும் பயிரிட முடியாது. பீட்ரூட், கேரட், கீரை, தக்காளி பெர்ரி போன்றவற்றை இந்த முறையில் பயிரிடலாம். சோலார் பேனல்களுக்கு அடியில் செடிகளை வளர்த்து ஆடு கோழிகளை விடுபவர்களும் உண்டு. இந்தியாவில் ஜோத்பூரிலுள்ள ICAR- மத்திய வரண்ட மண்டல ஆராய்ச்சி நிறுவனமானது, 105KW ஆற்றல் கொண்ட அக்ரி வோல்டாய்க் அமைப்பை உருவாக்கி, சில வறண்ட பகுதிகளில் 41% வரை விளைச்சலைக் கூட்டியது. 

இந்திய விவசாய நிலங்களில் இத்தகைய இரட்டைப் பயன்பாட்டை அதிகரித்தால், தோட்டத்திற்கு தேவையான மின்சாரம் கிடைப்பது மட்டுமின்றி, விளைச்சலையும் கூட்டி கூடுதலாகக் கிடைக்கும் மின்சாரத்தை விற்று விவசாயிகள் லாபம் பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com