2023 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் AI கமெண்ட்ரி அறிமுகம்.

2023 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் AI கமெண்ட்ரி அறிமுகம்.
Published on

2023 விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் கமெண்டரி எனப்படும் போட்டி வர்ணனையானது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பு, விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகக் கூறப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இது இன்னும் பல விளையாட்டுப் போட்டிகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பதைந் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். டென்னிஸ் போட்டிகளில் மிகவும் பழமையான விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் இயங்கும் வர்ணனை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்காகவே 'தி இங்கிலாந்து கிளப் மேனேஜ்மென்ட்', IBM நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. 

அதன்படி, விம்பிள்டன் போட்டிகளின் ஹைலைட்ஸ் ஒளிபரப்பப்படும் போது, அதில் ஆடியோ கமெண்ட்ரி மற்றும் Caption-கள், AI உதவியுடன் தானாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகெங்கிலுமுள்ள டென்னிஸ் ரசிகர்கள், விம்பிள்டன் போட்டியின் ஹைலைட்களை Wimbledon செயலி வாயிலாக, அனைவருக்கும் புரியும்படி பார்க்கலாம் என IBM நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்தத் தொழில்நுட்பம், போட்டியின்போது ஒரு நபர் வர்ணனை வழங்குவதன் தேவை மற்றும் சிரமங்களை நீக்கும். மேலும் ஹைலைட் வீடியோக்களுக்கான வசனங்களை இதுவே தானாக உருவாக்கும். இதுகுறித்து பேசிய IBM நிறுவன அகாடமிக் தலைவர் 'கெவின் ஃபாரர்', "இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி John McEnroe அவர்களுடைய கமெண்டரியை ஒருபோதும் மிஞ்ச முடியாது. மனிதர்களைப் போல இதனால் கமெண்ட்ரி கொடுக்க முடியுமே தவிர, மனிதர்களை ஒருபோதும் இந்தத் தொழில்நுட்பத்தால் ரீப்ளேஸ் செய்ய முடியாது. கமெண்டரியில் மனிதர்களின் தேவை எப்போதும் முக்கியம்" எனத் தெரிவித்தார். 

போட்டியில் அடுத்து என்ன நடக்கப் போகிறது. எந்தப் போட்டியாளர் இதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதையும் இந்தத் தொழில்நுட்பத்தால் கணிக்க முடியும். மேலும் ஒரு போட்டியாளர் எந்த அளவுக்கு டோர்னமெண்ட் முழுவதும் விளையாடுகிறார், இறுதியில் அவர் யாரை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதைக் கணிக்கும் ஆற்றலையும் இது பெற்றுள்ளது. 

கேம் ஆன் டெக்னாலஜியின் தலைமை நிர்வாக அதிகாரியான அலெக்ஸ் பெக்மேன் இந்தத் தொழில்நுட்பத்தைப் பாராட்டியுள்ளார். இதனால் பார்வையாளர்கள் போட்டியோடு அதிகம் ஒன்ற வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தொழில்நுட்பம் விம்பிள்டன் போட்டிகளில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே எதிர்காலத்தில் பல விளையாட்டுப் போட்டிகளில் இது அறிமுகம் செய்யப்படும் என சொல்லப்படுகிறது.  

இறுதியில் விளையாட்டுத் துறையிலும் AI தொழில்நுட்பம் நுழைந்துள்ளதைப் பார்க்கும்போது சற்று பயமாகத் தான் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com