ஐடி துறையை அதிரவைக்கும் AI… இந்த ஸ்கில்ஸ் கத்துக்கிட்டா மாசம் பல லட்சம் கன்பார்ம்!

Humans and AI working together as new tech jobs emerge
AI creates new jobsAI Image
கிரி கணபதி

வணக்கம், என் பெயர் கிரி கணபதி. என்னைப் பற்றி அறிய ஆர்வம் காட்டியமைக்கு நன்றி! கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக Content Creation துறையில் இருக்கிறேன். Writing, Video Content, Podcast போன்றவற்றில் அனுபவம் உண்டு. உள்ளடக்க ஆராய்ச்சி மற்றும் AI கருவிகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றுள்ளேன். ஆரோக்கியம், மோட்டிவேஷன், டெக்னாலஜி, சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். டிஜிட்டல் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நான், நிலையான வசீகரிக்கும் உள்ளடக்கங்கள் மூலமாக வாசகர்களையும், பார்வையாளர்களையும் கவர முடியும் என முழுமையாக நம்புகிறேன்.

Updated on

சில வருஷங்களுக்கு முன்னாடி வரைக்கும் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அப்படின்னு சொன்னாலே, அது நம்ம வேலையை எல்லாம் பிடுங்கிடும் அபாயம் இருக்குனு ஒரு பயம் எல்லோருக்குமே இருந்தது. முக்கியமாக டிஜிட்டல் மீடியாவில் கன்டென்ட் எழுதுபவர்கள், ஒரு டீமை அல்லது ஒரு வெப்சைட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் பலருக்கும் இந்த கலக்கம் இருக்கத்தான் செய்தது. 

ஆனால் நிஜம் அதுவல்ல. செயற்கை நுண்ணறிவு பல பழைய வேலைகளின் ஸ்டைலை மாற்றியமைத்து, கற்பனை செய்ய முடியாத அளவுக்குச் சம்பளம் தரும் பல புதிய வேலைகளை உருவாக்கியுள்ளது. உலகத்தையே ஆட்டிப்படைக்கப் போகும் சில மாஸான வேலை வாய்ப்புகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

Prompt & டேட்டா துறைகள்!

ஏஐ மாடல்களுக்கு நாம் என்ன கட்டளை கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் அவுட்புட் இருக்கும். இதை மிகத் துல்லியமாகச் செய்யும் நிபுணர்களை 'ப்ராம்ப்ட் இன்ஜினியர்கள்' என்று அழைப்பார்கள். ஒரு வார்த்தை மாறினாலும் மொத்த கன்டென்ட்டும் மாறிவிடும் என்பதால் இவர்களுக்கு இப்போது செம டிமாண்ட்.

அதேபோல, ஏஐ-க்கு சரியான தகவல்களைப் பயிற்றுவிக்க லட்சக்கணக்கான டேட்டாக்களை வகைப்படுத்தும் 'ஏஐ டேட்டா அனொடேட்டர்ஸ்' வேலைக்கும் எக்கச்சக்கமான தேவை இருக்கிறது. இந்தத்துறைகளில் இந்தியாவிலேயே வருடத்திற்குப் பல லட்சங்களில் பேக்கேஜ் கிடைக்கிறது.

நிர்வாகம் & ஆப்பரேஷன்ஸ்!

ஒரு புதிய ஏஐ ப்ராடக்ட்டை சந்தையில் எப்படி இறக்குவது, வாடிக்கையாளர்களின் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது என்று திட்டமிடும் 'ஏஐ ப்ராடக்ட் மேனேஜர்கள்' மற்றும் AI Ops Engineers இன்று ஐடி கம்பெனிகளின் செல்லப்பிள்ளைகளாக மாறிவிட்டார்கள். பெரிய பெரிய கிளவுட் சர்வர்களில் எந்த ஒரு டெக்னிக்கல் பிரச்சனையும் இல்லாமல் ஏஐ-யை இயங்க வைப்பது இவர்களின் முக்கிய பொறுப்பாகும். 

அதேபோல, தானியங்கியாக வேலை செய்யும் பாட்களைக் கண்காணித்து, அவை தடம் மாறாமல் பிசினஸ் நோக்கத்தோடு செயல்பட வைக்கும் 'ஏஐ ஏஜென்ட் மேனேஜர்கள்' பதவிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் கோடிகளில் சம்பளம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சுய மதிப்பீட்டின் மூலம் நம்மை அறிவது எப்படி?
Humans and AI working together as new tech jobs emerge

சட்டம், அறம் மற்றும் மனிதத் தொடர்பு!

தொழில்நுட்பம் வளரும்போது அதில் எந்த ஒரு சார்புத்தன்மையும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய 'ஏஐ எதிக்ஸ் நிபுணர்கள்' மற்றும் 'ஏஐ கவர்னன்ஸ் நிபுணர்கள்' பெருநிறுவனங்களால் அதிக அளவில் வேலைக்கு எடுக்கப்படுகிறார்கள். ஏஐ எடுக்கும் முடிவுகள் சமூகத்திற்குப் பாதுகாப்பானதா, மக்களின் பிரைவசி பாதிக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதே இவர்களின் வேலை. 

இதைத் தவிர்த்து, மனிதர்களும் ஏஐ-யும் எப்படி இணைந்து வேலை பார்க்கலாம் என்பதை வடிவமைக்கும் 'ஹியூமன்-ஏஐ கொலாபரேஷன் எக்ஸ்பர்ட்ஸ்' மற்றும் மனிதர்களிடம் இயல்பாகப் பேசும் சாட்பாட்களை உருவாக்கும் 'இன்டராக்ஷன் டிசைனர்கள்' போன்ற வேலைகளும் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளன. இந்த வேலைகளுக்கும் பல லட்சங்களில் ஆரம்ப சம்பளம் வழங்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான திறவுகோல்: நம்மை ஏற்றுக்கொள்வது எப்படி?
Humans and AI working together as new tech jobs emerge

காலமாற்றத்திற்கு ஏற்ப நம்மை நாமே அப்டேட் செய்துகொள்வது மட்டுமே வெற்றிக்கான ஒரே ரகசியம். ஏஐ என்பது ஒரு போட்டியாளர் கிடையாது, அது நம்முடைய திறமையை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் ஒரு சூப்பரான டூல். இந்த புதிய தொழில்நுட்பங்களைச் சரியாகக் கற்றுக்கொண்டால், எதிர்காலம் கட்டாயம் நம் கையில்தான்.

logo
Kalki Online
kalkionline.com