
Chat GPT போன்ற ஏஐ(AI) கருவிகள் பல பணிகளை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களைப் போல உரையாடுவதற்கும், கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாக பதில் அளிக்கவும் என பல பணிகளை செய்கின்றன. இவை மொழி மாதிரிகள் (language models) மூலம் இயங்குகின்றன. அத்துடன் மனிதர்களுடைய உரையாடல்களை பிரதிபலிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Chat GPT : இது Open AI உருவாக்கிய ஒரு மொழி மாதிரியாகும். இது கதைகள், கட்டுரைகள், கேள்விகளுக்கு பதில் அளிப்பது, மனிதர்களைப் போல உரையாடவும், எழுதவும் பயன்படுகிறது. ஒரே நேரத்தில் பல பயனர்களுடன் இவற்றால் உரையாட முடியும். இது வணிகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிக்கலான விஷயங்களை எளிமையாக விளக்க உதவுகிறது.
Meta AI: Meta AI, Chat GPTக்கு ஒரு மாற்றாக அமைந்துள்ளது. Meta, Instagram, WhatsApp, மற்றும் Messenger போன்ற தளங்களில் ஒன்றிணைக்கப்பட்டு செயல்படுகிறது.
சமூக ஊடக ஒருங்கிணைப்புக்கு சிறந்தது. இது அனிமேஷன் செய்யப்பட்ட பட உருவாக்கம் மற்றும் மனிதனைப் போன்ற பதில்கள் என தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது. இது தினசரி பயன்பாட்டிற்கு மிகவும் வசதியாக உள்ளது.
Chatsonic: Chat GPTக்கு போட்டியாக உள்ளடக்கத்தை உருவாக்கும் சிறந்த கருவியாக, சமீபத்திய தரவுகளை பயன்படுத்தி பல அம்சங்களை சிறப்பாக வழங்குகிறது. சாட்சோனிக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு அனைத்து விதங்களிலும் Chat GPTஐ முறியடிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுளின் தரவுகளை பயன்படுத்தி கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலை அளிக்கிறது. அத்துடன் மிகவும் எளிதாக வாய்ஸ் கமெண்ட் மூலமாக தொடர்பு கொள்ள முடிகிறது. இது குரல் மூலமே நமக்கு பதிலை அளிக்கிறது.
Google Gemini: கூகுள் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புக்கு சிறந்தது. நிகழ்நேர தரவு அணுகல், மல்டிமாடல் திறன்கள் போன்ற தனித்துவமான அம்சங்கள் நிறைந்தவை. இது வேகமானது. பல்துறை திறன் மற்றும் உற்பத்தி திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை செய்திகள், ஆராய்ச்சிக்கான சமீபத்திய தரவை தாமதமின்றி பெறுவதை உறுதி செய்கிறது.
Microsoft Copilot: வணிக உற்பத்தி திறன் மற்றும் அலுவலக ஒருங்கிணைப்புக்கு சிறந்தது. மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பயன்பாடுகளுடன் தடையற்ற ஒருங்கிணைப்பு போன்ற தனித்துவமான அம்சங்கள் நிறைந்தது.
மெருகூட்டப்பட்ட விளக்கக் காட்சிகளை உருவாக்குவது முதல் எக்செல் சூத்திரங்களை உருவாக்குவது வரை இவை மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய பணிகளை சிரமமின்றி செய்து நேரத்தை மிச்சப்படுத்துகிறது.
DeepSeek AI: Chat GPTன் போட்டியாளராக DeepSeek சாட்பாட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது துல்லியத்திற்காக உருவாக்கப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த AI கருவியாகும். செலக்டிவ் ஆக்டிவேஷன் எனப்படும் மேம்பட்ட அணுகுமுறையை பயன்படுத்துகிறது. இதன் வடிவமைப்பு அதிக செயல் திறன், குறைந்த தாமதம் மற்றும் செலவு குறைந்த செயல்திறனை விளைவிக்கிறது. தொழில்நுட்ப கணக்கீடுகள், கட்டமைக்கப்பட்ட தரவு பகுப்பாய்வு மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவு பணிகளுக்கு ஏற்றது. அதிக துல்லியம், கட்டமைக்கப்பட்ட பணிப்பாய்வுகள் மற்றும் கணக்கீட்டு திறன் தேவைப்படும் தொழில்களுக்கு DeepSeek சிறந்ததாக உள்ளது.
Perplexity AI: Chat GPTஐ விட ஸ்மார்ட்டான AI கருவி இது. கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன், தகுந்த ஆதார லிங்க்குகளையும் அளிக்கிறது.
Bard: கூகுள் உருவாக்கிய AI சாட்பாட். இது Chat GPTஐப் போலவே உரையாடலை துவக்கவும், கேள்விகளுக்கு பதில் தரவும் மற்றும் பிற AI பணிகளை செய்யவும் பயன்படுகிறது.
Chat GPT போன்ற AI கருவிகளின் பயன்கள்:
a) வாடிக்கையாளர் சேவை, கேள்விகளுக்கு பதில் அளிப்பது போன்ற வழக்கமான பணிகளை தானியங்குப்படுத்தலாம். இவை ஒரே நேரத்தில் பல பயனர்களுடன் உரையாட முடியும் என்பதால் வணிகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் பயனுள்ளதாக உள்ளது. சிக்கலான விஷயங்களை எளிமையாக விளக்கி உதவுகிறது.
b) பகுப்பாய்வு: ஆவணங்களை எழுதவும், மொழிபெயர்ப்புகள் செய்யவும், ஆராய்ச்சிக்கும், தரவு பகுப்பாய்வுக்கும் உதவுகிறது.
c) கல்வி: படிக்கும் பிள்ளைகளுக்கு பாடங்களை விளக்கவும், வீட்டுப் பாடங்களுக்கு உதவியாக இருப்பதும், புதிய கருத்துக்களை கற்றுக் கொள்ளவும் உதவுகிறது.
d) படைப்பாற்றல்: கவிதைகள் புனைவது, கதைகள், கட்டுரைகள் எழுதுவது, மொழிபெயர்ப்புகள் செய்வது போன்ற படைப்பாற்றலுக்கு பெரிதும் உதவுகின்றன.
e) வணிகம்: சந்தைப்படுத்தவும், வணிக ஆவணங்கள் தயாரிக்கவும், வாடிக்கையாளர்கள் சேவைக்கும், தயாரிப்பு விளக்கங்களுக்கும் பெரிதும் உதவுகின்றன.
இவற்றில் பதிலின் தரத்தையும், செயல்திறனையும், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை பற்றியும் பார்க்க வேண்டும். 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த Chat GPT மாற்றுகள் கூகுள் ஜெமினி, மெட்டா AI, மைக்ரோசாப்ட் கோபிலட் போன்றவையாகும்.
AI கருவிகள் அனைத்தும் தமிழ் மொழி ஆதரவுடன் வழங்கப்படுகின்றன. இதனால் பயனர்கள் தமிழில் கேள்விகளை கேட்கவும், பதில்களை பெறவும் முடிகிறது.