- பி.ஆர்.லட்சுமி
மாதா, பிதா, குரு, தெய்வம்… குருவை யாராவது இயந்திரமாக்கிப் பார்க்க இயலுமா…
நடைமுறைக் காலங்களில் செயற்கை நுண்ணறிவு எல்லாத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் வலைதளத்தில் நமக்குப் பிடித்த வண்ணங்களில் துணியைப் பற்றி தேடிவிட்டு அடுத்த ஒரு நகையைப் பற்றி தேடப் போனாலும் நாம் முன்னர் தேடிய துணி சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நமக்கு காண்பித்துக்கொண்டே இருக்கும். இது ஏஐ தொழில்நுட்பம்தான்… ஆனால், இவையெல்லாம் ஏஐன் மிக எளிய செயல்பாடுகள் என்றே சொல்ல வேண்டும்! ஏஐ தொழில்நுட்பத்தால் பல இயந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டுள்ளன! மேற்படி இயந்திர மனிதர்கள்
பாதாள சாக்கடை அடைப்பைச் சரி செய்ய,
அலுவலகத்தில் வரவேற்பாளர் பணி செய்ய,
ஆலைகளில் ஒப்பதியின் உற்பத்தியில் பங்கு கொள்ள என பல பணிகளை செய்து வருகின்றன.
கேரளாவிலும், அசாமிலும் ஆசிரியர் பணிகளுக்கு இயந்திரப் பெண் மனிதர்கள் வந்துள்ளன. இந்த ஆசிரியர்களால் நாம் என்ன நன்மை அடைந்து விட முடியும்… என்று மக்களில் பலர் நினைக்கின்றனர்.
கல்வி என்பது ஒரு குழந்தையின் எதிர்காலம். அந்த எதிர்காலப் பாடத்தைக் கற்றுத் தருவது ஆறறிவு உள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். அதை பள்ளிக் கல்வியிலிருந்து கல்லூரிக் கல்வி வரை முழுமையாகப் பெற்றால் மட்டுமே அந்த குழந்தையால் இந்தச் சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். அப்படி இருக்கும்பொழுது அத்தகைய கல்வியை இயந்திர ஆசிரியைகளினால் மனிதர்களால் அளிக்க முடியுமா? அதை நமது குழந்தைக்கு அளிக்கலாமா? என்பதுதான் இன்று சராசரி ஒவ்வொரு பெற்றோரின் கேள்வியாக நிற்கிறது.
இயந்திர ஆசிரியரால் நமக்கு கிடைக்கும்:
நன்மைகள்:
ஆசிரியை மாணவிகளுடன் கை கொடுக்கும்.
ஆசிரியை அஷ்டாவதானிபோல் ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்யும்.
ஆசிரியை விடுப்பு எடுக்காது.
தீமைகள்:
ஒரு இயந்திர ஆசிரியைக்கான முதலீடு அதிகம்.
ஒரு மாணவ, மாணவிகள் நிறைந்த வகுப்பறையில் பல்வேறு விதமான கற்றல், கற்பித்தல் திறன் நடைபெறும். வகுப்பறை மேலாண்மை குறித்த தேவைகளை இயந்திர ஆசிரியர்களால் செய்ய இயலாது.
வெறும் வகுப்பறை என்பது ஆசிரியை, மாணவ மாணவிகள் நிறைந்த கற்றல் கற்பித்தல் பணி மட்டும் கிடையாது.
அவர்களது முழுமையான சந்தேகங்களை தீர்க்கும் பூந்தோட்டமாகவே வகுப்பறை என்பது அமையும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சாதாரணமான இயந்திர ஆசிரியையால் அத்தகைய தீர்வுகளை அளிக்க இயலாது.
உதாரணத்திற்கு மாணவ, மாணவிகள் செய்யும் குறும்புகளை இயந்திர ஆசிரியர்களால் தட்டிக் கேட்க முடியாது.
இயந்திர ஆசிரியை உள்ளீடுகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தரும் தகவல்களும் தவறாகவே இருக்கும்.
உதாரணத்திற்கு வலைதளத்தில் இப்போது நாம் உள்ளீடு செய்யும் தகவல்கள் அனைத்துமே 100% உண்மை என நம்புவதில்லை.
நூலகங்களுக்குச் சென்று நூல்களை சரிபார்த்த பின்னரே வலைதளத்தில் காணும் தகவல்களை சரி பார்த்துக் கொள்கிறோம்.
அதே போல்தான் சுயமாக சிந்திக்க முடியாத திறன்கொண்ட இயந்திர ஆசிரியரால் பல நேரங்களில் சரியான பதிலைச் சொல்ல இயலாது.
ஆசிரியர்கள் இல்லாத மலைக் கிராமங்களில் இந்த இயந்திர ஆசிரியைகள் பணி செய்யலாம்.
ஆறறிவுள்ள மனித ஆசிரையைக்கு நிகராக AI ஆசிரியை ஒப்பாகாது என்பது என் கருத்து. உங்கள் கருத்தையும் Comments Box-ல் பதிவு செய்யலாமே!