AI தொடர்பான புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் துபாய் நிறுவனத்துடன் அதானி குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதானி குழுமம், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கோ என்ற நிறுவனத்துடன் இணைந்து AI தொடர்பான கூட்டு முயற்சியை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த கூட்டு முயற்சியின் விளைவாக, சிரியஸ் டிஜிடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதில் அதானி குழுமம் 49 சதவீத பங்குகளை வைத்திருக்கும். மேலும், சிரியஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் 51 சதவீத பங்குகளைக் கொண்டு இருக்கும்.
இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கூட்டு முயற்சியின் மூலம் மேம்படுத்துவதோடு, தகவல் தொடர்பு, வேளாண்மை, ஊடக நிறுவனம், டேட்டா சென்டர், கணினி உபயோகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பத்தை கூட்டு முயற்சியின் மூலம் உருவாக்க உள்ளது.
உற்பத்தி தொழில்களில் AI தொழில்நுட்பத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் இது உள்ளது. வருங்கால AI தேவையை கருத்தில் கொண்டு இந்த ஒப்பந்தம் மூலம் AI தொடர்பான ஆராய்ச்சிகள் மேலும் விரிவுபடுத்தபட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.