கண்ணின் பார்வையை பாதுகாக்க வருகிறது AI தொழில்நுட்பம்!

AI technology is coming to protect the eye sight.
AI technology is coming to protect the eye sight.

கண் பார்வை குறைபாடு பிரச்சினையை ஏஐ தொழில்நுட்பத்தால் சரி செய்ய முடியும் என்று டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

உடல் உறுப்புகளில் பிரதானமான உறுப்பு கண். ஆனால் கண்ணில் ஏற்படும் பிரச்சனை இன்று இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக தூர பார்வை கிட்ட பார்வை பிரச்சனைகளால் 20 நபரில் ஒரு நபர் பாதிக்கப்படுகிறார் என்று உலக சுகாதார ஆய்வு மையம் தெரிவிக்கிறது. அதிலும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஏற்பட்ட மாற்றத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிட்ட பார்வை அல்லது தூர பார்வை அல்லது இரண்டும் சேர்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். இப்படி வயது வரம்பின்றி இன்று அனைத்து தரப்பினருக்கும் பார்வை குறைபாடு பிரச்சனை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழகம் பார்வை குறைபாட்டை சரி செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன் தொடர்ச்சியாக மயோபியா நோய் பாதித்த நபரால் தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்க்க இயலாது. கிட்டத்தில் இருக்கும் பொருட்கள் மட்டுமே தெரியும். இவ்வாறான குறைபாடு உள்ள நபர்களுக்கு மிஷின் கன் அல்காரிதம் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் கண்ணில் ஏற்படும் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் கிட்டப் பார்வை நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு பார்வை குறைபாட்டை சரி செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த வகை குறைபாடு உள்ளவர்களுக்கு கண்ணாடி அணிவது அல்லது காண்டெக்ட் லென்ஸ் அணிவது அல்லது அறுவை சிகிச்சை செய்வது மருத்துவ முறைகளாக உள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் இந்த புதிய முயற்சி எந்த அளவிற்கு பயன்பெறும் என்பதை வரும் நாட்கள் உணர்த்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com