பூகம்பம் வருவதற்கு முன்பே அலாரம் வரும்!

Alarm before the earthquake
Alarm before the earthquake

இந்திய ஆண்ட்ராய்டு பயனர்களுக்காகவே பிரத்தியேகமாக ஒரு சிறப்பு சிஸ்டம் ஒன்றை கூகுள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலமாக பூகம்பம் வருவதற்கு முன்பே ஒருவருக்கு அலர்ட் கிடைத்துவிடும். நமது மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள ஆக்சிலரோமீட்டர் சென்சர்களைப் பயன்படுத்தி இந்த சிஸ்டம் முன்கூட்டியே பூகம்பத்திற்கான எச்சரிக்கையை நமக்குத் தெரியப்படுத்தும். 

இந்த Earthquake Alert System ஏற்கனவே பல நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மூலமாக நிலநடுக்கம் வருவதற்கு முன்பே பயனர்களின் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு எச்சரிக்கை விடப்படும். இந்த அம்சத்தை, தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தேசிய நில அதிர்வு மையம் ஆகியவற்றின் உதவியுடன் கூகுள் இந்தியாவுக்கு கொண்டு வர உள்ளது. 

இது எப்படி வேலை செய்யுமென்றால் இந்த சிஸ்டம் ஆண்ட்ராய்டு சாதனங்களில் உள்ள ஆக்சலோமீட்டரின் கீழ் செயல்படுகிறது. இதனால் நம்முடைய போன் ஒரு மினி பூகம்பம் கண்டுபிடிக்கும் டிடெக்டராக மாறுகிறது. அதாவது போனை ஒரு இடத்தில் நகராமல் வைக்கும்போது, பூகம்பத்தின் அறிகுறியை அது உணரும். இப்படி ஒரே நேரத்தில் பல போன்கள் பூகம்பத்திற்கான அறிகுறியை உணர்ந்தால், கூகுளின் சர்வர் பூகம்பம் வருவதையும், அது எங்கே வலிமையாக இருக்கும் என்பதையும் கண்டறிந்துவிடும். 

பின்னர் கூகுள் சர்வர் வழியாக மற்ற போன்களுக்கும் அலர்ட் அனுப்பப்படும். இத்தகைய அலார்ட் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக 4.5 ரிக்டர் அளவுக்குக் கீழாக நிலநடுக்கம் வந்தால் சாதாரண அலர்ட் அனுப்பப்படும். 4.5 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் வந்தால் Be Careful என்ற எச்சரிக்கை அனுப்பப்படும். 

இந்த அம்சத்தை எனேபிள் செய்வதற்கு போனின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று Safety & Emergency என்பதை கிளிக் செய்யவும். அதன் பிறகு காட்டும் Earthquake Alert என்பதை அழுத்தி, Safety & Emergency உள்ளே சென்று, உங்கள் லொகேஷனை தேர்வு செய்த பிறகு, Earthquake Alert என்பதை ஆன் செய்யவும். 

இதன் மூலமாக உங்கள் பகுதியில் நிலநடுக்கம் வரப்போகிறது என்றால், உடனடியாக உங்களுக்கு அலர்ட் மெசேஜ் வந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com