வந்தாச்சு D2M! ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்!

ஸ்மார்ட் போன்...
ஸ்மார்ட் போன்...tamil.timesnownews.com

னி Internet இல்லாமலும் உங்கள் மொபைலில் வீடியோ மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கலாம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
இந்தியாவின் அடுத்த டிஜிட்டல் பாய்ச்சல்
'நேரடியாக மொபைலுக்கு' (D2M) எனு‌ம் புதிய தொழில் நுட்பம் என்று சொன்னால் நம்புவீர்களா?

 ஆம். இணைய இணைப்பு எதுவும் இல்லாமல் ஸ்மார்ட்போன்களில் வீடியோ ஸ்ட்ரீமிங்கை அனுமதிக்கும் Direct To Mobile (D2M)  தொழில்நுட்பத்தின் சோதனைகளை இந்தியா வெகு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாங்யா லாப்ஸ் மற்றும் ஐஐடி கான்பூர் இணைந்து உருவாக்கிய இந்த நவீன  தொழில்நுட்பத்தின் சோதனைகள் 19 நகரங்களில்  விரைவில்  நடத்தப்பட உள்ளதாக சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஒளிபரப்பு உச்சி மாநாட்டில் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா, கூறினார்.

மேலும், இந்த தொழில்நுட்பத்தை செயல்படுத்த 470 ~ 582 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான வலுவான வசதிகளை உருவாக்கி வருவதாக தெரிவித்தவர்,  குறிப்பிட்ட சதவீத வீடியோ ஸ்ட்ரீமிங் டிராஃபிக்கை D2M சேவைக்கு மாற்றுவதன் மூலம் 5G நெட்வொர்க்குகளின் டிராபிஃக் நிலையும் மேம்படும் என்றும் இது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்றும் கூறினார்.

நாட்டில் உள்ள 28 கோடி குடும்பங்களில், 19 கோடி குடும்பங்களில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன என்றும் மீதமுள்ள 9 கோடி தொலைக்காட்சி இல்லாத வீடுகளும் இனி அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் D2M மூலம் கண்டு களிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த நவீன தொழில்நுட்பம் முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்டுள்ளது இதன் சிறப்பம்சம் ஆகும்.
D2M தொழில்நுட்பம் FM ரேடியோக்களைப் போலவே செயல்படுகிறது. ரேடியோ அலைவரிசைகளை அணுக ரிசீவரைப் பயன்படுத்துகிறது. மேலும்
மல்டிமீடியா உள்ளடக்கத்தை மொபைல் போன்களுக்கு நேரடியாகத் தள்ள OTT இயங்குதளங்கள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.

 D2M கொண்டு ஒரு குறிப்பிட்ட ஸ்பெக்ட்ரம், டேட்டா சிக்னல்களை நேரடியாக மொபைல் ஃபோன்களுக்கு அனுப்ப இயலுவதால் பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்தாமலேயே நேரடி டிவி போட்டிகள் போன்ற மல்டிமீடியா உள்ளடக்கத்தை நேரடியாக ஸ்ட்ரீம் செய்யலாம்.

தற்போது வழக்கில் இருக்கும் இணைய இணைப்பு  ஏதும் இல்லாமலேயே பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களில் பல்வேறு மல்டிமீடியா உள்ளடக்கங்களை அணுகுவதற்கு இது ஒரு மாறுபட்ட நவீன தொழில்நுட்பமாகும்.

அரசாங்கத்தின் தரவுகளின்படி, இந்தியாவின் 80 கோடி ஸ்மார்ட்போன்களில் பயனர்கள் விரும்பி அணுகும் உள்ளடக்கத்தில் கிட்டத்தட்ட 69% வீடியோ வடிவத்தில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
இந்த 5 உணவுகள் ஆல்கஹாலை விட மோசம்.. இதை சாப்பிட்டா உங்க கல்லீரல்?
ஸ்மார்ட் போன்...

டி2எம் என அழைக்கப்படும் இந்த தொழில்நுட்பம் கொண்டு, கேபிள் அல்லது டிடிஹெச் இணைப்பு மூலம் ஃபோன் பயனர்கள் தங்கள் சாதனங்களில் அனைத்து டிவி நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும் .

குடிமக்களுக்கு முக்கியமான தகவல்களை நேரடியாக ஒளிபரப்பவும், அவசர எச்சரிக்கைகளை வழங்கவும், போலிச் செய்திகளை எதிர்க்கவும், பேரிடர் மேலாண்மைக்கு உதவவும் இது உதவும் .
எனவே இந்த புதிய தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டால்,  80 கோடி பயனர்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களின் வரம்பை இது குறைக்கும் என்றும், வருங்காலத்தில் மொபைல் போனும் TV போல  ஒளிபரப்புவதற்கு ஏற்ற ஊடகமாக மாறிவிடும் என்றும் நம்பப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com