புதிய Ai அம்சத்தை அறிமுகம் செய்த Amazon.

புதிய Ai அம்சத்தை அறிமுகம் செய்த Amazon.
Published on

ன் பயனர்களுக்கு சேதமடையாத பொருட்களை அனுப்புவதில் அமேசான் இ-காமர்ஸ் நிறுவனம் தற்போது அதிக கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கு AI தொழில்நுட்பத்தை அவர்கள் பயன்படுத்தவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 

இணையத்தில் பொருட்களை வாங்கும்போது ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், சில சமயங்களில் சேதமடைந்த பொருட்கள் பயனர்களுக்குக் கிடைத்துவிடும். இது பொருட்களை அனுப்பும் இடத்திலிருந்தோ அல்லது வரும் வழியிலையோ சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சிக்கலை பெரும்பாலானவர்கள் எதிர்கொண்டிருப்பீர்கள். சேதமடைந்த பொருளை வாங்கி, அதை மீண்டும் ரிட்டன் அனுப்பி புதிய பொருளை வாங்குவதற்குள் நாம் சோர்வடைந்து விடுவோம். அந்த அளவுக்கு சிக்கலான ஒன்றாகவே இந்த நடைமுறை இருந்து வந்தது. 

இதுபோன்ற பிரச்சினைகளை அமேசான் எப்படி சரி செய்யப்போகிறது என பயனர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், தனது வேர் ஹவுஸ் தளங்களில் மாற்றத்தைக் கொண்டுவந்து, வாடிக்கையாளர்கள் சேதமடையாத பொருட்களைப் பெறுவதற்கு உறுதி செய்ய சில மாற்றங்கள் செய்துள்ளது அமேசான் நிறுவனம். இதன் மூலம் பயனர்களுக்கு அவர்களின் பொருட்களை அனுப்புவதற்கு முன் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதனை செய்யப்படும். 

இதனால் சேதமில்லாத பொருட்களே இனி வாடிக்கை யாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் அமேசான் நிறுவனத்தில் லட்சக்கணக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதால், பெரும்பாலான நேரங்களில் தொழிலாளர்கள், பொருட்களில் ஏற்பட்டுள்ள சேதங்களில் கவனம் செலுத்துவது கடினமாகும். மனிதர்கள் மூலம் சோதிக்கும் முறையானது அதிக நேரத்தையும் எடுத்துக்கொள்ளும். வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் பொருட்களில் பெரும்பாலான பொருட்கள் சிறந்த நிலையிலேயே இருப்பதால், பணியாட்கள் ஒவ்வொரு பொருளையும் எடுத்து சோதிப்பது கடினமான ஒன்றுதான். எனவே இதில் Ai தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மூலம் அமேசான் நிறுவனம் தங்கள் சேமிப்புக் கிடங்கின் செயல்திறனை மேம்படுத்த முடியும் என நம்புகிறது. 

மனிதத் தொழிலாளர்களின் அழுத்தத்தைக் குறைத்து, தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, அமேசான் நிறுவனம் தங்கள் கிடங்குகளில் அதிக வேலைகளை ஆட்டோமேஷன் செய்ய விரும்புகிறது. ஏனென்றால் அமேசான் நிறுவனத்தைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு சேதமில்லா பொருட்களை அனுப்புவது முக்கியமாகும். ஏனெனில் இது அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை முழுவதுமாகக் குறைக்கிறது. இதன் காரணமாகவே ஏற்கனவே அமேசான் தனது இரண்டு கிடங்குகளில் AI தொழிற்பத்தைப் பயன்படுத்தி சேதமடைந்த பொருட்களைக் கண்டறியத் தொடங்கியுள்ளது.  

புதிய ஏஐ-க்கு பயிற்சியளிக்க, அமேசான் கிடங்குகளில் சேதமடைந்த மற்றும் சேதமடையாத பொருட்களைக் காட்டும் படங்களை இதற்காகப் பயன்படுத்துகிறார்கள். இந்த படங்களோடு ஒப்பீடு செய்து, பொருட்களில் உள்ள குறைபாடுகளை Ai தொழில்நுட்பம் அடையாளம் கண்டுகொள்கிறது. 

இது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டால், பல நிறுவனங்களில் மனிதர்களுடைய பங்களிப்பே இல்லாமல் Ai தொழில்நுட்பமே பயன்படுத்தும் நிலை உருவாக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com