அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

Fire TV Stick 4K
Fire TV Stick 4K

அமேசான் நிறுவனம் தனது புதிய Fire TV Stick சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்ட்ரீமிங் டிவைஸில் பழைய ஜெனரேஷன் மாடல்களை விட பல புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக Wi-Fi 6 சப்போர்ட் மற்றும் அதிவேக 1.7 GHz Quad Core Processor கொண்ட இந்த சாதனம் பற்றிய முழு விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம். 

புதிதாக வெளியிடப்பட்டுள்ள Fire TV Stick 4K சாதனத்துடன் மியூசிக் ஸ்ரீமிங் பிளாட்பார்ம் மற்றும் வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்பார்ம்களை எளிதாக அணுகக்கூடிய பட்டன்கள் கொண்ட ரிமோட்டும் வருகிறது. கடந்த 2022-ல் அமேசான் நிறுவனம் மூன்றாம் தலைமுறை பயர் ஸ்டிக்கை அறிமுகப்படுத்தியது. ஆனால் இப்போதுதான் முதல்முறையாக 4K வீடியோ குவாலிட்டி கொண்ட ஸ்ட்ரீமிங் டிவைஸை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  

அம்சங்கள்: இந்த சாதனத்தைப் பயன்படுத்தி 4K அளவிலான வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்ய முடியும். மேலும் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆடியோ சப்போட்டும் உள்ளது. இதுவரை இந்தியாவில் விற்கப்பட்டு வரும் Fire Stick-களின் வரிசையில் இது மிகவும் ஆற்றல் திறன் மிக்கது என அமேசான் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.7GHz குவாட் கோர் பிராசசர், முந்தைய ஜெனரேஷன் சாதனத்தை விட சுமார் 30 சதவீத வேகம் வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. 

மேலும் இதில் அதிவேகமான Wi-Fi 6 கனெக்டிவிட்டி இருக்கிறது. இத்துடன் வரும் ரிமோட்டில் அலெக்சா வாய்ஸ் சப்போர்ட் உள்ளது. இதைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் பார்க்க விரும்பும் விஷயங்களை குரல் மூலமாகவே கேட்டு அதை ஸ்ட்ரீம் செய்து பார்க்க முடியும். மேலும் அமேசான் பிரைம், அமேசான் மியூசிக், Netflix போன்ற பிரபல ஆப்களுக்கான பிரத்தியேக பட்டங்களும் ரிமோட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நாம் விருப்பப்பட்ட தளத்தை மிக வேகமாக அணுகலாம். 

பயனர்களின் வசதிக்கு ஏற்ப சுமார் 12,000 க்கும் மேற்பட்ட செயலிகளை அணுகக்கூடிய வகையில் Fire TV Stick 4K வெளிவந்துள்ளது. இதில் சேர்க்கப்பட்டுள்ள லோ பவர் மோடு அம்சம் மூலமாக, நீங்கள் இந்த சாதனத்தை பயன்படுத்தாதபோது அதன் பேட்டரி எனர்ஜியை சேமிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
ஒரு நாயின் விலை 12 கோடியா? அப்பாடியோவ்!
Fire TV Stick 4K

விலை என்ன? 

கடந்த மே 3ம் தேதிமுதல் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த Fire TV Stick-ன் விலை ரூபாய் 5,999 ஆகும். அமேசான் வெப்சைட்டுக்கு சென்று நேரடியாக இதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது தவிர குரோமா ரிலையன்ஸ் டிஜிட்டல் போன்ற இடங்களிலும் கிடைக்கிறது. மேலும் இதை ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாகவும் வாங்கிக் கொள்ள முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com