Ambient Mode: யூடியூபில் இருக்கும் இந்த சீக்ரெட் அம்சம் பற்றி தெரியுமா?

Ambient Mode
Ambient Mode

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் பொழுதுபோக்கு தளமாக யூடியூப் இருக்கிறது. மக்கள் தங்களின் பெரும்பாலான நேரங்களை யூட்யூபில் வீடியோ பார்த்துக் கழிக்கின்றனர். இதில் பலருக்கு யூடியூப் இல்லாமல் அந்த நாளே செல்லாது என்கிற அளவுக்கு யூடியூப் மக்களுடன் ஒன்றிவிட்டது. இந்த அளவுக்கு அதிகப்படியான யூசர்களை கொண்டிருக்கும் யூடியூபில் உள்ள பல அம்சங்களைப் பற்றி பயனர்களுக்குத் தெரிவதில்லை. அப்படி பெரும்பாலான நபர்களால் பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு சூப்பர் அம்சம்தான் Ambient Mode. 

Ambient Mode என்பது, நீங்கள் யூட்யூபில் வீடியோவை காணும் அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு அம்சமாகும். என்னதான் இந்த அம்சம் அக்டோபர் 2022 இல் அறிமுகமானாலும், இதுபற்றி யாருக்கும் இன்றளவும் தெரியவில்லை. இந்த அம்சத்தின் மூலமாக ஒரு இருட்டான அறையில் அமர்ந்து நீங்கள் டிவி பார்த்தால் எப்படி இருக்குமோ, அதுபோன்ற உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தும். 

ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் டெக்ஸ்டாப்பில் இந்த ஆம்பியன்ட் மோடை எனேபிள் செய்ய முதலில் டார்க் தீமை ஆன் செய்ய வேண்டும். எனேபிள் செய்வதற்கு முதலில் உங்கள் youtube செயலியைத் திறந்து, உங்களது ப்ரோபைலை கிளிக் செய்யுங்கள். பின்னர் அதில் செட்டிங்ஸ் பக்கத்திற்கு சென்று  General உள்ளே டார்க் தீமை தேர்வு செய்து எனேபிள் செய்யவும். நீங்கள் டார்க் தீமை எனேபிள் செய்த உடனேயே, ஆம்பியன்ட் மோடும் தானாகவே ஆன் ஆகிவிடும். 

இதையும் படியுங்கள்:
இன்று விண்ணில் பாயும் GSLV – F14 விண்கலத்தின் நோக்கம் இதுதானா?
Ambient Mode

இது உங்கள் சாதனத்தில் எப்படி வேலை செய்கிறது என்பதை சரி பார்க்க உங்களது யூடியூப் கணக்கிற்கு சென்று ஏதேனும் வீடியோவை ப்ளே செய்து பாருங்கள். பின்னர் யூடியூப் பிளேயரின் வலது புறத்தில் உள்ள ஐகானைத் தேர்வு செய்து, ஆம்பியன்ட் மோடை கிளிக் செய்யுங்கள். இதை கிளிக் செய்ததும் உங்கள் வீடியோவில் நிறம் மாறுவதை நீங்கள் பார்க்கலாம். 

உண்மையிலேயே இந்த அம்சம் உங்களுக்கு சிறப்பான வீடியோ பார்க்கும் அனுபவத்தை ஏற்படுத்தும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com