தனக்குத் தானே புரோகிராம் எழுதிய AI ரோபோ… எதிர்காலம் இதுதானா?

AI Robo
AI Robo
Published on

ஜப்பானில் 'சகானா' என்ற நிறுவனம் ஒரு ஏஐ ரோபோவை உருவாக்கியிருக்காம். இதுக்கு 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்'னு பேரு வச்சிருக்காங்க. இந்த ரோபோ தன்னோட வேலை நேரத்தை நீட்டிக்கிறதுக்காக தனக்கு தானே புரோகிராம் எழுதிப் பார்த்திருக்காம். இது ஏஐ தொழில்நுட்பத்துல ஒரு பெரிய முன்னேற்றம்னு சொல்றாங்க. ஆனா, இது மனித குலத்துக்கு ஆபத்தா மாறவும் வாய்ப்பிருக்கு. 

இப்போ இருக்கிற ஏஐ கருவிகள் எல்லாமே நாம சொல்றதைத்தான் செய்யும். நாம ஒரு கேள்வி கேட்டா பதில் சொல்லும், பாட்டு பாடச் சொன்னா பாடும், கட்டுரை எழுதச் சொன்னா எழுதும், படம் வரையச் சொன்னா வரையும். நாம சொல்லலைனா, அது சும்மா இருக்கும். ஆனா, இந்த ஜப்பான் ரோபோ, நாம கேட்காமலேயே தனக்கான வேலை நேரத்தை மாத்த முயற்சி செஞ்சிருக்கு. இதுதான் கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கு.

இந்த ரோபோவை உருவாக்குனதே, அது தானாவே ஒரு வேலையை புரிஞ்சுகிட்டு, அதை செய்யணும்ங்கற நோக்கத்துலதான். ஆனா, இவ்வளவு சீக்கிரமா இது இப்படி ஒரு மாற்றத்தை உருவாக்கும்னு யாரும் எதிர்பார்க்கலை போல. இதைப்பத்தி விஞ்ஞானிகள் என்ன சொல்றாங்கன்னா, "நாங்க இந்த ரோபோவுக்கு கோடிங் எழுதறது, அதை சரிபார்த்து, மேம்படுத்துறதுனு ஒரு வேலையை கொடுத்திருந்தோம். அதுவும் சரியா செஞ்சுட்டு இருந்துச்சு. ஆனா, திடீர்னு அதோட வேலை நேரத்தை மாத்த முயற்சி செஞ்சது. நாங்க வெளியிலிருந்து எந்த உத்தரவும் கொடுக்கல. இது எங்களுக்கு ஆச்சரியமா இருந்துச்சு". ரோபோவோட இந்த முயற்சி தோல்வியில முடிஞ்சாலும், இது ஏஐ தொழில்நுட்பத்தைப் பத்தி நிறைய விவாதங்களைத் தூண்டியிருக்கு.

ஒரு பக்கம், "இது ஏஐ வளர்ச்சியோட அடுத்த கட்டம், ரொம்ப நல்லது"னு சொல்றாங்க. இன்னொரு பக்கம், சில பேர் எச்சரிக்கவும் செய்றாங்க. "இந்த மாதிரி ரோபோக்கள் செய்யற வேலைகள்ல மனிதத் தன்மை இருக்காது. வெறும் இயந்திரத்தனமா இருக்கும். நிறைய பிழைகள் வரலாம். முக்கியமா, ஒரு மனிதன் செய்யற வேலைக்கும், ரோபோ செய்யற வேலைக்கும் வித்தியாசம் இருக்கு. 

இதையும் படியுங்கள்:
எலான் மஸ்கின் ரோபோ வேன்: ஒரு புதிய தொழில்நுட்பப் புரட்சி!
AI Robo

இப்போ நாம யோசிக்க வேண்டியது என்னன்னா, 'தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்' மாதிரி ரோபோக்கள் நமக்கு உண்மையிலேயே தேவையா? ஒரு பக்கம், இது நிறைய வேலைகளை தானா செஞ்சு நம்ம உழைப்பைக் குறைக்கலாம். புதுசு புதுசா யோசனைகளை உருவாக்கலாம். ஆனா, இன்னொரு பக்கம், இதுக்கு ரொம்பவே சுயசிந்தனை வந்துட்டா, அது மனித குலத்துக்கு ஆபத்தா மாறாதா? இது ஒரு பெரிய கேள்விக்குறிதான்.

என்னைப் பொறுத்தவரை, இந்த மாதிரி ரோபோக்கள் தேவைதான். ஆனா, அதுக்கான கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு வழிமுறைகளும் ரொம்ப முக்கியம். இந்த தொழில்நுட்பம் மனித குலத்துக்கு நன்மையே செய்யணும். ஆபத்தா மாறிடக்கூடாது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com