Tesla நிறுவனத்தில் முக்கிய பதவியில் இந்தியர்!

Tesla New CFO
Tesla New CFO
Published on

டெஸ்லா நிறுவனத்தில் CFO என்கிற முக்கியப் பதவியில் இந்தியர் ஒருவரை எலான் மஸ்க் நியமித்துள்ளார். 

உலகப் பணக்காரர்கள் தரவரிசையில் டாப் இடத்தில் இருந்து வரும் எலான் மஸ்க் அவர்கள், டெஸ்லா, ஸ்பேஸ் X போன்ற பல தலைசிறந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டில் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கி அதில் பல அதிரடி மாற்றங்கள் செய்ததோடு மட்டுமல்லாமல், சமீபத்தில் அந்நிறுவனப் பெயரையே X என மாற்றி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். 

மேலும் எலக்ட்ரானிக் கார்களை உற்பத்தி செய்து விற்பதில் பல முன்னணி நிறுவனங்களில் டெஸ்லா நிறுவனமும் ஒன்று. இந்நிலையில் தான் Tesla நிறுவனத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வைபவ் தனேஜா என்பவரை CFO எனப்படும் தலைமை நீதி அதிகாரியாக நியமனம் செய்துள்ளார். இவர் ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தில் தலைமை கணக்கியல் அதிகாரியாக செயல்பட்டு வந்திருக்கிறார். 

இந்நிலையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு தலைமை நிதி அதிகாரியாக உயர்த்தப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் CFO ஆக பணியாற்றி வந்த நபர் பதவி விலகியதையடுத்து, அந்த இடத்திற்கு வைபவ் தனேஜா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் டெஸ்லா நிறுவனத்தில்  CAO அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். அதன்பிறகு 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டெஸ்லா நிறுவனத்தின் இந்திய பிரிவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 2016 ஆம் ஆண்டு டெஸ்லா நிறுவனம் சோலார் சிட்டி என்ற சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய நிறுவனத்தை தொடங்கியது. அங்குதான் இவர் முதன்முதலாக பணிக்குச் சேர்ந்து, 2017 ஆம் ஆண்டில் டெஸ்லா நிறுவனத்தில் இணைந்தார். இந்நிலையில் வைபவ் தனேஜா என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் டெஸ்லா நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com