3000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சையா? பிரமிக்க வைக்கும் எகிப்திய மருத்துவ ரகசியங்கள்!

பழைய எகிப்து நாகரிகம் மருத்துவ வரலாற்றின் அதிசய தொடக்க பக்கமாக உள்ளது. அவர்கள் உருவாக்கிய கருவிகள் இன்றைய மருத்துவ சாதனங்களின் அடிப்படை வடிவங்களாகவே பார்க்கப்படுகின்றன.
Early surgical tools
Early surgical tools
Published on

மருத்துவ அறிவின் வரலாற்றைத் தேடிச் சென்றால், அதன் தொடக்கப் படியில் நின்று கொண்டிருப்பது பழைய எகிப்து நாகரிகம். மனித உடலமைப்பு, காயச் சிகிச்சை, பல் மருத்துவம், எலும்பு முறிவு போன்ற துறைகளில் அவர்கள் பயன்படுத்திய கருவிகள்(Early surgical tools) இன்றைய மருத்துவ கருவிகளின் ஆரம்ப வடிவங்கள் என வரலாறு ஒப்புக்கொள்கிறது.

1. எகிப்தில் மருத்துவத்தின் உயர்ந்த நிலை:

பழைய எகிப்தியர்கள் மருத்துவத்தை ஒரு புனித துறையாகக் கருதினர். “Per-Ankh” எனப்படும் Houses of Life என்பது கல்வி, மருத்துவம், ஆராய்ச்சி ஆகியவை ஒன்றிணைந்த மையமாக இருந்தது. இங்கு மருத்துவர்கள் பல துறைகளில் நிபுணர்களாகப் பயிற்சி பெற்றனர்.

2. அறுவைச் சிகிச்சை கருவிகள் (Surgical Instruments):

ஸ்கல்பல் (Scalpel) மற்றும் அறுவை கத்திகள் வெண்கலம், தாமிரம், ஒப்சிடியன் கல் போன்றவற்றால் செய்யப்பட்டன. இவை காயங்களைத் திறக்க, மம்மி செய்ய, உடல் வெட்ட புண்ணில் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மையான அறுவை கருவிகளில் ஒன்று.

ட்வீசர்கள் (Tweezers): முள், சிறிய கற்கள், பூச்சிக் கடி போன்றவற்றால் ஏற்பட்ட காயங்களை சிகிச்சை செய்ய ட்வீசர்கள் பயன்படுத்தப்பட்டன. சிறிய பொருட்களை எடுக்கும் துல்லியமான கருவி.

இதையும் படியுங்கள்:
உலகில் உள்ள 6 வித்தியாசமான ஹோட்டல் அறைகள்!
Early surgical tools

ஹூக்கள் (Hooks): கூரான ஹூக்கள் – இறந்த திசுக்களை அகற்ற, வட்டமான ஹூக்கள் – உறுப்புகளை மெதுவாக அசைக்க, மம்மி செய்யும் சடங்கிலும் மிகப் பெரிய பங்கு வகித்தது.

3. சிரிஞ்ச் போன்ற கருவிகள்:

நவீன ஊசி இல்லாவிட்டாலும், புடைப்புகளில் உள்ள நீர்மத்தை உறிஞ்ச சில மூலிகை திரவங்களை உடலுக்குள் அழுத்தி செலுத்த அவர்கள் குழல் + அழுத்தக் கருவி போன்ற வடிவங்களைப் பயன்படுத்தினர். இதுவே சிரிஞ்சின் ஆரம்ப வடிவமாகக் கருதப்படுகிறது.

4. புற்று எரிக்கும் கருவிகள் (Cautery Tools):

இரும்புக் கம்பிகளை தீயில் காய்ச்சி ரத்தக்கசிவை தடுக்க, தொற்று பரவாமல் தடுக்க, காயங்களை எரித்து சிகிச்சை செய்தனர். நவீன ‘electrocautery’க்கு இது மூல முன்மாதிரி.

5. அம்பு அகற்றும் கருவிகள் (Arrow Extractors):

போர் அதிகமாக இருந்ததால், அம்பு காயங்கள் பொதுவாக இருந்தன. அதற்காக நீளமான, மூலைகள் மிளிராத சிறப்பு உலோக கருவிகளை வடிவமைத்தனர். அம்பு உடைக்காமல் அகற்ற இது உதவியது.

6. எலும்பு சிகிச்சை கருவிகள்:

மரம், வெண்கலம் கொண்டு செய்யப்பட்ட ஸ்ப்ளிண்ட் (Splints), சணல் துணியால் செய்யப்பட்ட பந்தேஜ்கள் எலும்பு முறிவுகளை சரிசெய்ய பயன்பட்டன. எகிப்தர்கள் முதுகெலும்பு, கை, கால் முறிவு சிகிச்சையில் மிகவும் முன்னேறியிருந்தனர்.

7. பல் மருத்துவ கருவிகள்:

பற்களை இழுக்கும் சிறிய உலோக கருவிகள், பற்களை சுத்தம் செய்ய கூர்மையான நாணல்கள், மசை நோய்களுக்கு மூலிகை கலவைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. எகிப்தில் பல் மருத்துவமும் மிகவும் பழமை வாய்ந்தது.

8. மருந்து தயாரிப்பு கருவிகள்:

கல் உரல், உலக்கை, இவற்றால் மூலிகைகள், கனிமங்கள், எண்ணெய்கள் அரைத்து மருந்தாக்கினர். Ebers Papyrus போன்ற நூல்கள் நானூறும் மேற்பட்ட மருந்துகள் இருந்ததை காட்டுகின்றன.

இதையும் படியுங்கள்:
எகிப்த் பாலைவனத்தில் பீட் சர்க்கரை ஆலை!
Early surgical tools

9. மம்மி செயல்முறையில் பயன்படுத்திய கருவிகள்: மம்மிபிகேஷன் எகிப்தின் மிக முக்கியமான கலாசாரம். இது மருத்துவ அறிவுக்கு பெரிய ஆதாரமாக இருந்தது.

இவை எல்லாம் மருத்துவ அறிவை வளர்த்தன. பழைய எகிப்து நாகரிகம் மருத்துவ வரலாற்றின் அதிசய தொடக்க பக்கமாக உள்ளது. அவர்கள் உருவாக்கிய கருவிகள் இன்றைய மருத்துவ சாதனங்களின் அடிப்படை வடிவங்களாகவே பார்க்கப்படுகின்றன. அறிவு, பாரம்பரியம், மற்றும் மருத்துவத்தில் கொண்டிருந்த மதிப்பு அவர்களை உலகின் முதன்மையான மருத்துவ நாகரிகங்களில் ஒன்றாக மாற்றியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com