ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை செய்துவிடுங்கள். கூகுள் எச்சரிக்கை.

ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் ஆண்ட்ராய்டு பயனர்கள் இதை செய்துவிடுங்கள். கூகுள் எச்சரிக்கை.

ண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்துபவர்களுக்கு கூகுள் நிறுவனம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அந்த எச்சரிக்கையில், வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குள் உங்கள் சாதனத்தை அப்டேட் செய்து விடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளது. 

ஆண்ட்ராய்டு நிறுவனத்தின் மிகவும் பழைய OS-களில் ஒன்றான கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்-க்கு இனிமேல் எவ்விதமான ஆதரவும், அப்டேட்டும் வழங்கப்படமாட்டாது என கூகுள் அறிவித்துள்ளது. எனவே KitKat ஓஎஸ்-ஐ இன்றளவும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு யூஸர்கள் முடிந்தவரை வேகமாக உங்கள் சாதனத்தின் ஓஎஸ்-ஐ லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக 2023 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக Kitkat OS பயன்படுத்தும் சாதனங்களை புதிய OSக்கு அப்டேட் செய்துவிடும் படி கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் இந்த திடீர் நடவடிக்கைக்கு யூசர் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பிற்காக புதிய ஓஎஸ் வெர்ஷன்களில் மேம்படுத்தல்கள் செய்யப் பட்டிருப்பதால், அதில் மேற்கொண்டு கவனம் செலுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

ஒருவேளை அந்த பழைய ஓஎஸ்-ல் இருந்து புதிய ஓஎஸ்-க்கு அப்டேட் செய்யவில்லை என்றால், ஆண்ட்ராய்டு டெவலப்பர்களின் அறிவிப்பின்படி, கூகுள் பிளே ஸ்டோர் சேவைகள் KitKat OS-க்கு விரைவில் நிறுத்தப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதம் தொடங்கியதும் இது நடைமுறைக்கு வரும். எனவே நீங்கள் பழைய ஓஎஸ்-ஐ அப்டேட் செய்யவில்லை என்றால், உங்கள் சாதனத்தில் கூகுள் பிளே ஸ்டோர் வேலை செய்யாது. தற்போது ஆக்டிவாக உள்ள கிட்கேட் ஓஎஸ் ஆண்ட்ராய்டு சாதனங்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் கீழே இருப்பதால், இதனால் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படாது என சொல்லப்படுகிறது. 

KitKat ஓஎஸ் முதன்முறையாக 2013-ல் வெளியிடப்பட்டு மிகவும் பிரபலமாகத் திகழ்ந்தது. இருப்பினும் தொழில்நுட்ப உலகில் ஏற்பட்ட மாற்றங்களால் அந்த OS தற்போது காலாவதியாகிவிட்டது. இதில் புதிய அப்டேட்டுகளுக்கான ஆதரவு இல்லாத பட்சத்தில், அதைப் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கு செக்யூரிட்டி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆண்ட்ராய்டின் பல புதுமையான அம்சங்களை அதனால் ஏற்றுக்கொள்ளவும் முடியாது. 

இதில் சிலர் இன்றளவும் மிகவும் பழைய போனை பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களால் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு வெர்ஷனை டவுன்லோட் செய்ய முடியவில்லை என்றால் புதிய ஸ்மார்ட்போன் தான் வாங்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com