ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை!

Android users beware
Android users beware

ஆண்ட்ராய்டு போன்களின் ஆதிக்கம் இந்த உலகையே மாற்றிவிட்டது எனலாம். இன்றைய காலகட்டத்தில் கையில் ஸ்மார்ட்போன் இல்லை என்றால் நம்மை வித்தியாசமாக பார்க்கும் மனநிலை வந்துவிட்டது. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. அத்துடன் இதைப் பயன்படுத்தி இணையதள சேவையைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. 

ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப் பின்பே இணையத்தின் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், இந்திய கணினி பாதுகாப்பு அவசரநிலைக் குழு, ஆண்ட்ராய்டு சாதனங்களில் ஏற்பட்டுள்ள பல முக்கிய குறைபாடுகளைக் கண்டறிந்து அதன் பயனர்களை எச்சரித்துள்ளது. குறிப்பாக ஆண்ட்ராய்டு வெர்ஷன் 11 முதல் 14 வரை பயன்படுத்தும் ஆப்ரேட்டிங் சிஸ்டம்களில் இந்த குறை உள்ளதை அந்த குழு கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

இந்த குறைபாட்டால் பயனர்களின் சாதனங்களில் உள்ள தகவல்களைத் திருட முடியும் என்றும், ஒருவர் பயன்படுத்தும் இணையதள சேவையை முற்றிலுமாக முடக்க முடியும் எனவும் இந்த குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த குறைபாட்டால் எப்போது வேண்டுமானாலும் அந்த சாதனம் சைபர் தாக்குதலுக்கு உட்படலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

இந்த எச்சரிக்கையை கூகுள் நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த வாரம் கூகுளின் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு அறிக்கையில், அவர்களது ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் ஏற்பட்டுள்ள குறைகளை சரி செய்வது தொடர்பான பாதுகாப்பு அப்டேட்டை விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்குவோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதுவரையில் ஆண்ட்ராய்டு பயனர்கள் உங்களது சாதனத்தை சற்று பாதுகாப்புடன் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தேவையில்லாத எந்த லிங்குகளையோ, மெசேஜ்களையோ, அழைப்புகளையோ நம்பி உங்களின் தனிப்பட்ட விவரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். பெரும்பாலான சைபர் குற்றங்கள் பணத்தாசை காட்டியே நடத்தப்படுவதால், யாரையும் நம்பி எதிலும் முதலீடு செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com