மனிதர்களைப் போல விலங்குகளும் கனவு காணுமா?

Animals Dream
Animals Dream
Published on

பழங்காலக் கதைகள் முதல் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் வரை, விலங்குகள் மிகவும் புத்திசாலித்தனமானவை, அவற்றின் மன ஓட்டங்கள், செயல்முறைகள் எவ்வளவு தெளிவானது என்பதை நாம் அறிவோம். விலங்குகள் தன் அறிவைப் பயன்படுத்தி உணவை வேட்டையாடி உண்கிறது. பாதுகாப்பாக தங்குமிடம் அமைக்கிறது. அவ்வப்போது சில அறிவு முதிர்ச்சியான செயல்களை செய்து தங்களை நிரூபிக்கவும் செய்கின்றன. இவ்வளவு அறிவுத் திறன் கொண்ட விலங்குகளுக்கு கனவும் இருக்கும் அல்லவா!

சில நேரங்களில் நீங்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் தூங்கும் போது வால் ஆட்டுவதையே, வாய் அசைப்பதையோ, காதுகளை ஆட்டுவதையோ, தீடிர் என்று எழுந்து கத்துவதையோ நீங்கள் பார்த்து இருக்கலாம். தூங்கும் போது நாய்கள் குஷியாக லேசான சத்தத்துடன் முனகும், சில நேரம் சாப்பிடுவதை போல காற்றை நக்கிக் கொண்டிருக்கும். இது எல்லாம் அவை காணும் கனவின் வெளிப்பாடுகள் தான்.

விலங்குகளைப் பற்றிய அறிவியல் ஆய்வுகள் அவை தூங்கும்போது கனவு காண்கின்றன என்பதை உறுதி செய்கின்றன. மனிதர்களைப் போலவே விலங்குகளுக்கும் பல்வேறு வகையான கனவுகள் வருகின்றது. மனிதர்களைப் போன்றே விலங்குகளுக்கும் கனவு காணும் திறன் உண்டு. மனிதர்கள் தங்கள் இணையிடம் பேசி களிப்படைவது போல விலங்குகளுக்கும் கனவு வரும். அப்போது அவை முகம் தூக்கத்தில் இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கும். நாய்க்கு இரையை உண்ணுவதை போல கனவு வரலாம். நாய் தூங்கும் போது கடிப்பதை போல கனவினால் உந்தப்படுகிறது. உடனடியாக வெறும் வாயை கடிக்க அது முயற்சி செய்கிறது. கனவில் தன் எஜமானர் வந்தால் அதன் வால் தனியாக ஆடும் இதுவும் உள்ளுணர்வின் வெளிப்பாடு தான்.

இதையும் படியுங்கள்:
‘கடல் பச்சோந்திகள்’ என்று அழைக்கப்படும் உயிரினத்தின் சிறப்புகள் தெரியுமா?
Animals Dream

ஒரு நாளைக்கு 20 மணிநேரம் தூங்கும் கோலாக்கள் முதல் மூளையின் பாதியை விழித்திருக்கும் நிலையில் தூங்கும் டால்பின்கள் வரை கனவு காண்கின்றன.

பறவைகள் தங்கள் கனவில் பாடல்களைப் பாடுவதைக் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சிங்கம், புலி எல்லாம் கனவில் அடிக்கடி வேட்டையாடும். இப்படியே உயிரினங்கள் பலவும் கனவை காண்கின்றன.

'அரிஸ்டாட்டில்' விலங்குகளின் தூக்கத்தின் பற்றி ஒரு கருத்தை கூட கூறியுள்ளார். தி ஹிஸ்டரி ஆஃப் அனிமல்ஸ் என்ற புத்தகத்தில் நாய்கள் கனவு காண்பது மட்டுமல்ல, நாய்கள் தூக்கத்தில் குரைப்பதன் மூலம் தங்கள் கனவைக் காட்டுகின்றன என்று எழுதியுள்ளார்.

கனவுகள் பெரும்பாலும் தெளிவானதாகவும், சிக்கலானதாகவும், விரிவாகவும் இருக்கும், நம் மனதில் முழு உலகத்தையும் உருவாக்குகிறது. கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்துவதும், நடக்காத அல்லது உடல் ரீதியாக சாத்தியமில்லாத விஷயங்களை கற்பனை செய்வதும் அவற்றில் அடங்கும். சில நேரங்களில் கனவில் பேய், விலங்குகள் கூட வந்து மனிதர்களை பயமுறுத்தும்.

இதையும் படியுங்கள்:
பூனைகளைக் கொன்றால் மரண தண்டனை!
Animals Dream

டார்வினின் கூற்றுப்படி "நாய்கள், பூனைகள், குதிரைகள் மற்றும் அநேகமாக அனைத்து விலங்குகள், பறவைகள் கூட தெளிவான கனவுகளைக் கொண்டிருப்பதால், அவை அவற்றின் அசைவுகள் மற்றும் உச்சரிக்கப்படும் ஒலிகளால் வெளிப்படுத்தப்படுகின்றன", அவை கற்பனை ஆற்றலைக் கொண்டுள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஒரு விலங்கின் கனவுகளை நம்மால் கவனிக்க முடியாது, ஆனால், அவற்றின் உறங்கும் மனதில் நிகழும் காட்சிகள், ஒலிகள் அல்லது செயல்பாடுகளை நம்மால் கணிக்க முடியும். கனவு காணும்போது அவர்களின் மூளை செல்கள் எவ்வாறு சுடுகின்றன என்பதைக் கவனிப்பதன் மூலமும், அந்த வடிவங்களை விலங்குகளின் விழித்திருக்கும் நிலைக்கு ஒப்பிடுவதன் மூலமும் இது செய்யப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com