லோன் வழங்கும் செயலிகளை நீக்கிய ஆப்பிள்.

லோன் வழங்கும் செயலிகளை நீக்கிய ஆப்பிள்.
Published on

ப்பிள் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஆப் ஸ்டோரிலிருந்து பல கடன் வழங்கும் செயலிகளை நீக்கியுள்ளது. பயனர்களும் ஊடகங்களும் இந்த செயலிகள் குறித்து அதிருப்தி தெரிவித்த பின்னரே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஷ், ஓகே ரூபி போன்ற பிரபலமான லோன் வழங்கும் ஆப்களை, தனது ஆப் ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது ஆப்பிள் நிறுவனம். இந்த செயலிகள் அனைத்துமே பிரபலமானவையாகும். தனது ஆப் ஸ்டோரின் நிதி பிரிவில் முதல் 20 இடங்களுக்குள் இந்த செயலிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நூற்றுக்கணக்கான பயனர்கள் இந்த செயலிகளில் இருக்கும் பிரச்சனை குறித்து புகார் அளித்ததால், அவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெரிய வந்தது. 

அதிக வட்டி கேட்பது, கடனாளிகள் வழங்கிய கடனை வற்புறுத்தி செலுத்தும்படி மிரட்டுவது, மிகவும் மூர்க்கத்தனமாக இந்தச் செயலியின் பின்னணியில் இயங்கும் ஊழியர்கள் மக்களை கையாண்டதாக பல புகார்கள் பதிவாகியுள்ளன. சில பயனர்களிடம் அவர்களின் தனிப்பட்ட புகைப்படங்கள், தனிப்பட்ட விவரங்கள் போன்றவற்றையும் இவர்கள் பெறுவதாக புகாரளிக்கப்பட்டது. கடன் தொகையை செலுத்த தவறினால், உங்களைப் பற்றி உங்கள் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் வெளிப்படுத்திவிடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். 

இந்த செயலிகள் அனைத்துமே சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள், பெயர்களைக் கொண்ட தனி நபர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.‌ இதே போன்ற பல செயலிகள் ஆப்பிள் ஸ்டோரிலும், ஆண்ட்ராய்டு ஸ்டோரிலும் அதிகமாக இருக்கிறது. சில கடன் வழங்கும் நபர்களிடமிருந்தும் பல அச்சுறுத்தல்களை மக்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர். இதனாலேயே இந்த செயல்களை தங்கள் தளத்திலிருந்து ஆப்பிள் நீக்கியுள்ளது. 

இதுபோன்ற லெண்டிங் செயலிகள் அவர்களுக்கான ஒழுங்குமுறையை சரியாக பின்பற்றாததால், அவர்களின் மீது நம்பிக்கை இழந்து இதை செய்தோம் என்கிறது ஆப்பிள் நிறுவனம். லோன் வாங்கியவர்களை வற்புறுத்துவது, திடீரென வட்டியை அதிகமாக உயர்த்துவது என கடன் வாங்கிய பயனர்களை இவர்கள் மோசடி செய்துள்ளனர். இவர்களால் பாரம்பரிய நிதி சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை பாதுகாப்பான பயனர் அனுபவத்தை வழங்குவதற்காகவே எடுக்கப்பட்டுள்ளது. 

மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் செயலிகள் டெவலப்ர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப் பாடுகளை ஆப்பிள் தொடர்ந்து பராமரிக்கும் எனக் கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com