நீங்கள் SBI வங்கியின் வாடிக்கையாளர் என்றால் எந்தெந்த வழிகளில் உங்களது SBI அக்கவுண்ட் பேலன்ஸை செக் செய்து கொள்ளலாம் என அறிந்து வைத்திருப்பது முக்கியம். SBI வழங்கும் அக்கவுண்ட் பேலன்ஸ் செக்கிங் ஆப்ஷனில் மிஸ்டு கால் கொடுப்பது, வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய ஆப்ஷன்கள் அடங்கும். SBI யில் அக்கவுண்ட் வைத்துள்ளவர்கள் தங்கள் பேங்க் பேலன்ஸை செக் செய்து கொள்ள இந்த முறைகள் ஒவ்வொன்றையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.
SMS மூலம் உங்கள் SBI பேங்க் பேலன்ஸை செக் செய்து கொள்வது எப்படி:
உங்கள் எண்ணை ரெஜிஸ்டர் செய்ய 07208933148 என்ற நம்பருக்கு ‘REG Account Number’ என்ற மெசேஜை அனுப்ப வேண்டும். அதன் பின் BAL என டைப் செய்து, உங்கள் ரெஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து +919223766666 என்ற நம்பருக்கு SMS அனுப்பி உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸை சரி பார்க்கலாம்.
மிஸ்டு கால் மூலம் SBI பேங்க் பேலன்ஸை செக் செய்வது எப்படி.?
உங்கள் நம்பரை நீங்கள் ஒன்டைம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்துள்ளீர்கள் என்பதை உறுதி செய்து கொண்டு, குறிப்பிட்ட அந்த நம்பரில் இருந்து +919223766666 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் செய்யவும். சில வினாடிகளில் உங்களது பேங்க் பேலன்ஸ் விவரங்கள் உங்களது மொபைல் நம்பருக்கு மெசேஜாக அனுப்பப்படும்.
வாட்ஸ்அப் பயன்படுத்தி SBI பேங்க் பேலன்ஸை செக் செய்வது எப்படி.?
அக்கவுண்ட் பேலன்ஸ் செக்கிங் உட்பட பல பேங்க் சேவைகளை பயன்படுத்த வாட்ஸ்அப் பேங்க் வசதி உங்களை அனுமதிக்கிறது. உங்கள் வாட்ஸ்அப் நம்பரில் இருந்து +919022690226 என்ற நம்பருக்கு வாட்ஸ்அப்பில் Hi என வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பவும். இதனைத்தொடர்ந்து Chat-Bot வழங்கும் வழிமுறைகளை பின்பற்றி உங்களது அக்கவுண்ட்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நெட் பேங்கிங்:
பாதுகாப்பான இன்டர்நெட் கனக்ஷன் மற்றும் டிவைஸ் பயன்படுத்தி வங்கியின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான -க்கு விசிட் செய்து, உங்கள் நெட் பேங்கிங் யூஸர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்-ஐ என்டர் செய்யவும். பின் பேலன்ஸ் செக்கிங் உட்பட வங்கி வழங்கும் பிற சர்விஸ்களை பயன்படுத்தவும்.
SBI-யின் Quick app: SBI Quick app என்பது வங்கி வழங்கும் சர்விஸ் ஆப் ஆகும். App Store அல்லது Play Store-லிருந்து இதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த App மூலம் லாகின் செய்து பேலன்ஸ் செக்கிங் உட்பட அனைத்து சேவைகளையும் அணுகலாம்.