நீங்கள் தினசரி கூகுள் மேப்ஸ் பயன்படுத்துபவரா?

நீங்கள் தினசரி கூகுள் மேப்ஸ் பயன்படுத்துபவரா?

லகம் முழுவதிலுமுள்ள மக்கள் தற்போது கூகுள் மேப் செயலியை அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். முன்பின் தெரியாத இடத்திற்கு செல்பவர்களுக்குக் கூட இந்த கூகுள் மேப் செயலியானது பேருதவி புரிகிறது. இதைத்தொடர்ந்து இந்த செயலியில் பல்வேறு விதமான புதிய மேம்படுத்தல்களை கூகுள் நிறுவனம் அவ்வப்போது செய்து வருகிறது. 

முன்பெல்லாம் ஒரு இடத்திற்கு செல்ல வழி தெரிய வில்லை என்றால், ஏதேனும் ஒரு ஆட்டோ டிரைவரிடம் கேட்டால் போதும், எப்படி சென்றால் விரைவாக செல்லலாம், எந்த பக்கம் டிராபிக் குறைவாக இருக்கும் என அனைத்தையும் விளாவாரியாக தெளிவுபடுத்தி விடுவார்கள். ஆனால் தற்போது ஸ்மார்ட்போனில் உள்ள கூகுள் மேப் செயலியை ஒரு தட்டு தட்டினால் போதும், நீங்கள் எங்கு செல்ல வேண்டுமானாலும் இண்டு இடுக்கு, மூளை முடுக்கு என அனைத்தையும் துல்லியமாக காட்டிக் கொடுத்துவிடும். அந்த அளவுக்கு தொழில் நுட்பமானது தற்போது வளர்ந்திருக்கிறது. இந்த அளவுக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் கூகுள் மேப் செயலியானது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

என்னதான் இது நமக்கு பயனுள்ள வகையில் இருந்தாலும், இதை பயன்படுத்தும் போது நாம் எதையெல்லாம் தேடுகிறோம் எங்கெல்லாம் செல்கிறோம் என்ற விவரங்கள் இந்த செயலியில் பதிவாகி இருக்கும். இந்த ஹிஸ்டரியை வாரம் ஒரு முறையாவது கிளியர் செய்வது நல்லது. ஏனென்றால் ஒருவருடைய டேட்டா அந்த அளவுக்கு முக்கியமானது. தற்போது பயனர்களின் டேட்டாவை வைத்து தான் பல தொழில்கள் இயங்கி வருகிறது. கூகுள் நிறுவனமானது கூகுள் மேப்ஸ் பயன்படுத்துவர்களின் பயண விவரங்களை சேகரித்து அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என்பதற்கேற்ப வணிகரீதியான விளம்பரங்களை காண்பிக்கிறது. 

கூகுள் மேப்பில் ஹிஸ்டரியை அழிக்கும் வழிமுறைகள்: 

முதலில் கூகுள் மேப் செயலியை ஓபன் செய்து, அதில் உங்களுடைய ப்ரொபைல் பிச்சர் மேல் கிளிக் செய்யவும். அதன்பின்பு வரும் விருப்பத்தில், Your Timeline என்பதை கிளிக் செய்து உள்ளே நுழைந்தால், மேலே வலப்புறம் இருக்கும் மூன்று புள்ளிகளைத் தொட வேண்டும். 

அடுத்ததாக Settings & Privacy என்ற விருப்பத்தை தேர்வு செய்து, Delete All Location History என்பதை கிளிக் செய்தால் நீங்கள் எங்கெல்லாம் சமீபத்தில் பயணம் செய்தீர்கள் என்று கூகுள் மேப்பில் சேமிக்கப்பட்டுள்ள விவரம் அழிக்கப்படும். 

பின்னர், அதே பக்கத்தில் Automatically Delete Location History என்ற விருப்பத்தை தேர்வு செய்தால், எத்தனை மாதத்துக்கு முந்தைய பயண விவரங்களை அழிக்க வேண்டும் என அதில் உள்ளிடுகிறோமோ அதன்படி தானாகவே அந்த நேரத்தில் அழிந்துவிடும்.

IOS பயனர்கள் மேற்கூறிய முறையிலேயே கூகுள் மேப்ஸ் செட்டிங் பக்கத்திற்கு சென்று மேப் ஹிஸ்டரியை தேர்வு செய்தால், Search Option உதவியோடு உங்கள் பயண விவரங்களை அழிக்க முடியும். 

இந்த முறையை பயன்படுத்தி உங்கள் பயணம் மற்றும் தனிப்பட்ட விவரங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com