நீருக்கு அடியில், பூமிக்கு அடியில் சுற்றுலா என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. ஏன் வேற்றுகிரகங்களுக்கு கூட சுற்றுலா செல்லும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆனால், ஆகாய சுற்றுலா பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சுற்றுலா துறையின் அடுத்தக்கட்ட வளர்ச்சியில், Stratosphere-ல் பயணம் செய்யும்விதமாக மூன்று ஸ்டார்ட்-அப்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ்-ன் Zephalto, பிளோரிடாவின் Space Perspective மற்றும் அரிசோனாவின் வேர்ல்ட் வியூ ஆகியவை அழுத்தப்பட்ட காப்ஸ்யூல்கள் மற்றும் வாயு நிரப்பப்பட்ட பலூன்களைப் பயன்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அடுக்கு மண்டலத்திற்கு ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளன. இந்த காப்ஸ்யூல், ஆறு மணி நேர பயணத்திற்கு எட்டு வாடிக்கையாளர்களையும், இரண்டு பணியாளர்களையும் கொண்டு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு பார் மற்றும் குளியலறை உள்ளன. இந்த பயணத்தின்மூலம் விண்வெளிக்கு செல்லமுடியாது, ஆனால் பூமியின் மேற்பரப்பில் இருந்து 15-31 கிமீ உயரத்தை எட்ட முடியும். ஆனால், பூமியின் மேற்பரப்பில் இருந்து 80 கிமீ உயரத்தில் தான் விண்வெளி தொடங்குகிறது என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பலூன் சவாரி, ராக்கெட் போல் இருப்பதைவிட, நாம் விமானத்தில் செல்வதுபோலத்தான் இருக்கும். மூன்று ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இதுவரை வேர்ல்ட் வியூ 1,250 டிக்கெட்டுகளை விற்றுள்ளது, அதே நேரத்தில் ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் 1,800 டிக்கெட்டுகளை விற்றுள்ளது. Zephalto விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. ஆனால் அதன் ஆரம்ப விமானங்கள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தியது.
நிறுவனங்களுக்கு இடையே டிக்கெட் விலை மாறுபடும். வேர்ல்ட் வியூ இருக்கைகள் ஒவ்வொன்றும் $50,000, ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் ஒரு இருக்கைக்கு $125,000-க்கு மற்றும் Zephalto இன் டிக்கெட்டுகளின் விலை $184,000-க்கு விற்கின்றன. தொடக்கமே நல்ல வசூலை ஈட்டியது மட்டுமின்றி, இந்த ஐடியாவிற்கு ஒரு உற்சாகத்தையும் வழங்கியுள்ளது.
இந்த சுற்றுலா பயணத்தின்மூலம் உலகை மேலிருந்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைக்கொள்பவர்கள், தங்களவு கனவை நினைவாக்கிக்கொள்ளலாம். இந்த அனுபவத்தை பெற நிறைய பேர் முன்வருகிறார்கள்.