பார்வையற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய விடியல் பிறக்கப் போகிறது. ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண் பார்வையை இழந்தவர்களுக்கு ஒரு புதிய விடியலை ஏற்படுத்தும் வகையில் ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பை செய்துள்ளனர். அதுதான் உலகின் முதல் பயோனிக் கண்.
Gennaris Bionic Vision System என அழைக்கப்படும் இந்தத் தொழில்நுட்பம், பார்வையை இழந்த கோடிக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பார்வை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பம் ஏற்கனவே விலங்குகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இது மனிதர்களிலும் வெற்றிகரமாக செயல்பட்டால் கோடிக்கணக்கான பார்வையற்றவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக மாறும்.
இந்த மேம்பட்ட அமைப்பு கண்களில் இருந்து மூளைக்கு காட்சித் தகவல்களை அனுப்பும் கண் நரம்புகள் வழியாக செயல்படுகிறது. இது மூளையில் உள்ள பார்வை மையத்திற்கு நேரடியாக சிக்னல்களை அனுப்புகிறது. இதன் மூலம் பயனர்கள் இயற்கை காட்சிகளைக் காண முடியும். இதை செயல்படுத்த பார்வையற்றவர்கள் வயர்லெஸ் ட்ரான்ஸ்மீட்டர் மற்றும் கேமராவுடன் கூடிய தலைக்கவசம் அணிய வேண்டும். முழு அமைப்பும் சிறிய 9 மில்லி மீட்டரில் மூளையில் உள்ளே வைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. காட்சித் தரவைப் பெறவும், பகுப்பாய்வு செய்யவும் அவை மூளையில் பொருத்தப்படுகின்றன. இந்த உள்வைப்புகள் மூளைக்கு நேரடியாக சிக்கல்களை அனுப்பி பயனர்கள் தங்கள் சூழலைப் பார்க்க உதவுகின்றன.
இந்தத் தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டாலும், தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் இந்த புரட்சிகரமான தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் முதன்முதலில் ஆடுகளில் பயன்படுத்தப்பட்ட போது, குறைந்த எதிர்மறை முடிவுகளையே கொடுத்தது. இது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது. தற்போது இந்தத் தொழில்நுட்பம் மெல்போர்னில் மனிதர்கள் மீது பயன்படுத்தப்படுகிறது.
இந்த பயோனிக் கண் பயன்படுத்தி பார்வையை மீட்டெடுப்பதோடு, நரம்பியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இந்த செயற்கை கண் 100 டிகிரி வரை பார்வையை வழங்குகிறது. இது மனித கண் வழங்கும் 130 டிகிரி பார்வையை விட சற்று குறைவு. இருப்பினும், இந்தத் தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்பதில் சந்தேகமில்லை.
பயோனிக் கண் தொழில்நுட்பம் மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் பார்வை இழந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.