Barcode (vs) QR Code – ஓர் ஆய்வு!

QR Code
QR Codepixabay.com
Published on

Barcode என்றால் என்ன?

பார்கோடு என்பது செங்குத்தாக, மாறுபட்ட தடிமன் மற்றும் இடைவெளியில் அமைந்திருக்கும், பல தொடர் கோடுகளைக் கொண்டிருக்கும் தரவுகளை சேமிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வடிவமாகும். பார்கோடு ஒரு பொருளின் தயாரிப்புக் குறியீடு, விலைகள் மற்றும் சரக்கு விவரங்கள் போன்ற தகவல்களை சேமிக்கப் பயன் படுத்தப்படுகிறது. பார்கோட்களை Universal Product Code, Code 39, Code 128 மற்றும் European Article Number உட்பட பல வகைகளாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றிற்கும் அதன் சொந்த அமைப்பு மற்றும் சேமிக்கும் முறை உள்ளது. 

Barcode-களின் ப்ளஸ் (+) என்ன?

* பார்கோடுகளை உருவாக்குவதும் அச்சிடுவதும் எளிதானது. 

* இது செலவு குறைந்ததாகவும் இருப்பதால், சிறு குறு வணிகர்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் இருக்கும். 

* இதற்கான சாதனம் மற்றும் மென்பொருள் அமைப்பு, சிக்கலின்றி எளிதாக இருக்கும்.

* இது செங்குத்தான அமைப்பு என்பதால், பார்கோட் ஸ்கேனர்கள் விரைவாகவும், துல்லியமாகவும் அவற்றைப் படித்து டிகோட் செய்ய முடியும். 

Barcode-களின் மைனஸ் (-) என்னென்ன? 

* பாரம்பரிய பார்கோடுகள் குறிப்பிட்ட சேமிப்புத் திறன் மட்டுமே கொண்டவையாகும். 

* பார் கோடுகளை ஒரு திசையில் மட்டுமே ஸ்கேன் செய்யமுடியும். எனவே ஸ்கேனரை சரியான திசைக்குக் கொண்டு செல்வது அவசியமாகிறது.

* இவற்றை உடனடியாக மாற்றவோ, புதுப்பிக்கவோ முடியாது.

QR Code என்றால் என்ன? 

QR Code அல்லது Quick Response Code என்பது, வெள்ளை பின்னணியில் அமைக்கப்பட்ட கருப்பு சதுரங்களைக் கொண்ட 2 Dimensional பார்கோடுகளாகும். பாரம்பரிய பார்கோடுகளுடன் ஒப்பிடுகையில் இதில் பெரிய அளவான தரவுகளைச் சேமிக்க முடியும். இதன் காரணமாகவே இப்போது பெரும்பாலான இடங்களில் QR Code-கள் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, வர்த்தகம் மற்றும் பணப்பரிவர்த்தனையில் இவற்றின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது எனலாம். 

Barcode...
Barcode...

QR Code-களின் ப்ளஸ் (+) என்ன?

* இதன் அதிக தரவுத்திறன் காரணமாக, URL, உரைகள், தொடர்பு விவரங்கள் மற்றும் மல்டிமீடியா உள்ளடக்கத்தை இதில் சேமிக்க முடியும். 

* ஏதேனும் பிழை ஏற்பட்டாலும் திருத்த முடியும். சேதமடைந்திருந்தாலும் வெற்றிகரமாக ஸ்கேன் செய்யும். 

* உடனடியாக இதில் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றால், புதுப்பிப்புகளை எளிதாக செய்துவிடலாம். 

QR Code-களின் மைனஸ் (-) என்னென்ன? 

* இவற்றை உருவாக்கி அச்சிடும் செயல்முறை சிக்கலானது. 

* இதற்கென சிறப்பு மென்பொருள் அல்லது சேவை தேவைப்படும். 

* இதை ஸ்கேன் செய்வதற்கு ஸ்மார்ட்போன் அல்லது ரீடர் தேவைப்படுவதால் சில பயனர்களுக்கு இதன் அணுகல் கட்டுப்படுத்தப்படுகிறது. 

* அதிக தரவு திறன் காரணமாக பெரிய டிஸ்ப்ளே தேவை. 

Barcode-களில் இருந்து QR Code-கள் எவ்வாறு வேறுபடுகின்றன?

* QR Code-களில் அதிகமான தரவுகளைச் சேமிக்கலாம். 

* Barcode-கள் செங்குத்தான கோடுகளைக் கொண்டிருக்கும். ஆனால் QR குறியீடுகள், இரு பரிணாமங்களில் அமைந்திருக்கும்படி உருவாக்கப்பட்டிருக்கும். அதாவது நேராகவும், செங்குத்தாகவும் பார்கோடுகள் இருக்கும் எனச் சொல்லலாம். 

* பார்கோடுகளை ஒரே திசையில் மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும். QR கோட்களை எல்லா திசையிலும் ஸ்கேன் செய்யலாம். 

* பார்கோட்களை ஸ்கேன் செய்ய பிரத்தியேகக் கருவி வேண்டும். ஆனால் QR கோட்களை ஸ்மார்ட்போன் பயன்படுத்தியே ஸ்கேன் செய்யலாம்.

 QR Code
QR Code

Barcode மற்றும் QR Code இரண்டும் ஒன்றா? 

நிச்சயமாக இல்லை. பார்கோட் மற்றும் QR கோட் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை. அவற்றுக்கென தனித்துவமான கட்டமைப்பு, தரவு திறன், ஸ்கேனிங் செயல்முறைகள் உண்டு. அவற்றில் பல வேறுபாடுகளும் உள்ளன. 

QR Code-கள் Barcode-களை Replace செய்யுமா? 

முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பார்கோடுகளைவிட, QR கோட்கள் அதிகப்படியான பயன்களை வழங்கினாலும், இதனால் பார்கோடை முழுமையாக மாற்றமுடியாது. அவற்றின் பயன்பாட்டிற்கு ஏற்ற இடங்களில் நிச்சயம் பார்கோட் தொடர்ந்து பயன்படுத்தப்படும். 

Barcode-களை விட QR Code-களின் நன்மைகள் என்ன? 

Barcode-களைவிட QR Code-களில் அதிகத் தரவை நாம் சேமிக்க முடியும். குறிப்பிட்ட சில பகுதிகள் சேதமடைந்து இருந்தாலும் QR Code வேலை செய்யும். ஆனால் Barcode அப்படியல்ல. நிகழ் நேரத்தில் ஏதாவது பிழைத்திருத்தம் செய்ய வேண்டுமென்றாலும், QR Code-ல் செய்யலாம்; ஆனால் Barcode-ல் அது முடியாது. 

QR Code-கள் எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் எவ்வளவு துல்லியமானவை? 

QR Code-கள் ஆயுட்காலம் வரை நீடிக்கும் தன்மை கொண்டவை. இவை 30 சதவீதம் சேதமடைந்தாலும் நன்றாக இயங்கும். இதை நீங்கள் எந்தப் பக்கமாக ஸ்கேன் செய்தாலும் துல்லியமாக இயங்கும்படி உருவாக்கப்படுகிறது. இருப்பினும், அவை மோசமாக அச்சிடப்பட்டிருந்தாலோ அல்லது அதிகமாக சேதமாகி இருந்தாலோ, ஸ்கேனிங் துல்லியத்தை அது பாதிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
போட்டோக்ஸ் ஊசி போட்டுக்கப் போறீங்களா? அப்போ கட்டாயம் இதைத் தெரிஞ்சிக்கணும்!
QR Code

நான் எனக்கு சொந்தமாக QR Code உருவாக்க முடியுமா? 

ஆம், நிச்சயமாக உருவாக்கலாம். இதற்காக பல்வேறு ஆன்லைன் கருவிகள் மற்றும் மொபைல் செயலிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுக்குச் சொந்தமாக QR கோட் உருவாக்க முடியும். இதற்காக சில வெப்சைட்டுகளும் இணையத்தில் உள்ளன. தேடிப்பார்த்து உங்களுக்கு தேவை இருப்பின் தாராளமாக உருவாக்கலாம். 

QR Code மற்றும் Barcode-ல் எது சிறந்தது? 

இதில் எது சிறந்தது எனக் குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது. ஏனெனில் உங்களுடைய தேவையைப் பொறுத்து பயன்பாடு மாறுபடும். உங்களுக்கு பெரிய தரவு திறன், பிழைதிருத்தம் மற்றும் சிறப்பான உள்ளடக்கத் திறன்கள் தேவைப்பட்டால் QR Code பயன்படுத்தலாம். இல்லையேல் சாதாரண தரவுகளைச் சேமிக்க, எளிமையாக இயங்கக்கூடிய Barcode-களே போதுமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com