செல்போனை ரீஸ்டார்ட் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

செல்போனை ரீஸ்டார்ட் செய்வதால் ஏற்படும் நன்மைகள்...

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பலருக்கு அதை எப்படி முறையாக பராமரிப்பது என்பது தெரிவதில்லை. அதை முறையாகப் பராமரிக்கவில்லை என்றால் விரைவில் அதன் திறன் குறைந்து பழுதடைய வாய்ப்புள்ளது. ஆனால், உங்கள் ஸ்மார்ட் ஃபோனை ரீஸ்டார்ட் செய்தாலே அதிலுள்ள பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா?

தற்போது எல்லா தரப்பு வயதினருமே ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிலும் பல சீன நிறுவனங்கள் வாரம் ஒரு புது போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. குறிப்பாக 5ஜி போன்கள் இந்தியாவில் பட்ஜெட் விலையிலேயே கிடைக்கிறது. இந்த சாதனத்தால் மனிதர்களின் பல வேலைகள் எளிமையாகி உள்ளது. ஸ்மார்ட் ஃபோனைப் பயன்படுத்தி, இருக்கிற இடத்தில் இருந்து கொண்டே பணம் செலுத்துதல், உணவை ஆர்டர் செய்தல், மின் கட்டணம் செலுத்துதல், டிக்கெட் முன்பதிவு செய்தல் போன்ற பல விஷயங்களை நம்மால் செய்ய முடியும். 

இப்படி பல நன்மைகளுக்கு பயன்படும் ஸ்மார்ட்ஃபோன்களை சரியாக இயங்க வைப்பது மிக முக்கியம். அதற்கு அவ்வப்போது போனை ரீஸ்டார்ட் செய்தாலே போதும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். ஸ்மார்ட்ஃபோன் மட்டுமின்றி லேப்டாப், கம்ப்யூட்டர், அல்லது வேறு ஏதாவது மின்சாதனமாக இருந்தாலும் அதை ரீஸ்டார்ட் செய்வது மூலம் அதிலுள்ள பிரச்சினைகள் தானாகவே சரியாகிவிடும். போனை ரீஸ்டார்ட் செய்யும்போது தேவையில்லாமல் மெமரியில் இருக்கும் விஷயங்களை அது கிளியர் செய்யும். அத்துடன் பேட்டரி ஆப்டிமைசேஷன், நெட்வொர்க், மெமரி மேனேஜ்மென்ட் போன்றவையும் சிறப்பாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

இதில் பலருக்கு ஒரு வாரத்திற்கு எத்தனை முறை போனை ரீஸ்டார்ட் செய்யலாம் என சந்தேகம் இருக்கும். இதற்கு நிபுணர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு மூன்று முறையாவது போனை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்கள். மேலும் போனை ரீஸ்டார்ட் செய்வதால் மிக மோசமான ஹார்டுவேர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் சரியாக வாய்ப்புள்ளது. நாம் பயன்படுத்தும் ஸ்பான்ஃபோன் தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருப்பதால், அதன் செயல்திறன் பாதிக்கப்பட்டு வேகம் குறைகிறது. எனவே உங்களுடைய ஸ்மார்ட்ஃபோனை அவ்வப்போது ரீஸ்டார்ட் செய்வது முக்கியம்.

உங்கள் ஸ்மார்ட்ஃபோனை நீண்ட காலம் பழுதாகாமல் பயன்படுத்த வேண்டும் என்றால், அடிக்கடி ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். அதேபோல நீங்கள் எந்த எலக்ட்ரானிக் சாதனம் பயன்படுத்தினாலும் அதை முறையாக அப்டேட் செய்வதும் அவசியம். நிறுவனங்கள் கொடுக்கும் ஒவ்வொரு அப்டேட்டிலும் அதில் இருக்கும் ஏதோ ஒரு பிரச்சனை தீர்த்து வைக்கப்படும். எனவே ஒவ்வொரு ஸ்மார்ட்ஃபோனுக்கும் அப்டேட் அவசியமாகிறது. 

அதேபோல போனில் அதிகம் பயன்படுத்தாத செயல்களை நீக்கிவிட வேண்டும். இத்தகைய செயலிகள் மெமரியை அடைத்துக்கொண்டு ஸ்மார்ட்ஃபோனின் வேகத்தைக் குறைத்துவிடுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com