கார் டயரில் நைட்ரஜன் பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

Benefits of using nitrogen in car Tyres.
Benefits of using nitrogen in car Tyres.

பெரும்பாலான பெட்ரோல் பம்புகளில் காற்று நிரப்பிக் கொள்வதற்கான கம்ப்ரஸர் வைத்திருப்பார்கள். அங்கு மொத்தம் இரண்டு வகையான இயந்திரம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஒன்றில் சாதாரண காற்று நிரப்பிக் கொள்ளலாம். மற்றொன்றில் நைட்ரஜன் எரிவாயு இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும். 

சாதாரண காற்றுக்கும் நைட்ரஜன் காற்றுக்கும் என்ன வித்தியாசம்? சாதாரண காற்றுக்கு பதிலாக நைட்ரஜன் வாயுவை கார் டயர்களை நிரப்பினால் எதுபோன்ற நன்மைகள் கிடைக்கும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

1. சாதாரண காற்றுடன் ஒப்பிடும்போது நைட்ரஜன் காற்றை டயர்களில் நிரப்பினால் அது டயரின் ஆயுளை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் சாதாரண காற்றை விட நைட்ரஜன் வாயுவின் அடர்த்தி மிக மிகக் குறைவு. மேலும் இதனால் டயரில் அதிக வெப்பம் உருவாகும்போது இந்த காற்று வெப்பநிலையைக் குறைக்க உதவும். 

2. உங்கள் வாகனத்தின் மைலேஜ் அதிகரிக்க விரும்பினால், கார் டயர்களின் நைட்ரஜன் வாயு நிரப்புவது நல்லது. சாதாரண காற்று, டயர்களில் இருந்து விரைவில் வெளியேறிவிடும். இதனால் உங்கள் வாகனம் குறைந்த மைலேஜ் தரும். ஆனால் அடர்த்தி குறைவு காரணமாக நைட்ரஜன் காற்று அவ்வளவு எளிதில் வெளியேறுவதில்லை. இதனால் வாகனத்தின் மைலேஜ் பராமரிக்கப்படுகிறது. 

3. அதிக தூரம் பயணிக்கும்போது கார் டயர்கள் வெப்பமாகி வெடிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதுவே நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தும்போது, கார் டயரின் வெப்பநிலை பராமரிக்கப்பட்டு வெடிப்புகளைத் தடுக்கிறது. மேலும் நிலையான டயர் அழுத்தம், தேய்மானத்தைக் குறைத்து டயரின் ஆயுளை நீடிக்க வைக்கிறது.  

இதையும் படியுங்கள்:
கோட்டைகளின் அரசனான ஜெப்பூருக்கு ஒரு பயணம்.. மீண்டும் மன்னர் காலத்துக்கு போகலாம் வாங்க!
Benefits of using nitrogen in car Tyres.

4. நைட்ரஜன் ஒரு மந்த வாயுவாகும். அதாவது மற்ற பொருட்களுடன் இவை வினை புரியும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு என்பதால் டயரின் உள்ளே ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அரிப்பைக் குறைக்க உதவும். இதனால் டயர் மற்றும் சக்கரத்தின் ஆயுள் கூடும். 

இவ்வளவு நன்மைகளையும் பூர்த்தி செய்வதென்பது தரமான நைட்ரஜன், ஓட்டுனரின் நிலைமைகள் மற்றும் வாகனத்தின் வகை போன்ற காரணிகளைப் பொறுத்து மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் அவ்வப்போது டயர் அழுத்தத்தை சரி பார்த்து வந்தாலே, டயர் பராமரிப்புக்கு அது பெரிதும் உதவும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com