இலவசமாகப் படங்களை உருவாக்க உதவும் சிறந்த 5 AI கருவிகள்!

Best AI tools for image generation
Best AI tools for image generation
Published on

இந்த நவீன உலகத்தில்; இணைய பயன்பாடுகளும், தொழில்துறை முன்னேற்றமும் எதிர்பாராத விகிதத்தில் வளர்ந்து வருகின்றன. இப்போது அதனை ஒட்டிய செயற்கை நுண்ணறிவும் நன்கு வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்த செயற்கை நுண்ணறிவானது இப்போது எல்லா துறைகளிலும், பரவலாக பயன்படுத்தப்பட்டு வளர்ந்து கொண்டே வருகிறது. காலப்போக்கில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது அசுரவேகத்தில் வளர்ந்து விடும் என்பதில் எந்த ஒரு ஐயமும்மில்லை.

ஏனென்றால், இப்போதே AI பயன்பாடுகள் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அப்படிப்பட்ட இந்த AI காலத்தில், நமது புகைப்படங்களையோ, வேறு புகைப்படங்களையோ திருத்தவோ(editing), மீள் உருவாக்கம் செய்யவோ, மறு உருவாக்கம் செய்யவோ அல்லது புதிய புகைப்படங்களை உருவாக்கவோ போன்ற விஷயங்களை செய்யக்கூடிய அதேபோல் நமக்கு உதவக்கூடிய சிறந்த AI கருவிகளை பற்றி இப்போது, இந்த கட்டுரையில் நாம் பார்ப்போம்.

பொதுவாக, AI கருவிகளில் நாம் நமக்கு பிடித்த புகைப்படங்களை பெறுவதற்கு, அதற்கு தகுந்த வகையில் தட்டச்சு செய்து பெறுவோம். அதேபோல் பழைய புகைப்படங்களை, புதிய புகைப்படங்களாக மீள் உருவாக்கம் செய்யவும் பயன்படுத்துகிறோம். ஒரு சில AI கருவிகளை பயன்படுத்துவதற்கு நாம் பணம் செலுத்த நேரிடும். இது இல்லாமல் இலவசமாக புகைப்படங்களை உருவாக்க பயன்படும் AI கருவிகள் என்னவென்றால், Chat GPT, Leonardo AI, Ideogram AI, Google AI studio, Meta AI போன்றவைகள் அடங்கும்.

Chat GPT: இது பொதுவாக அனைவராலும் பரவலாக பயன்படுத்தப்படும் AI கருவி ஆகும். இதில் உங்களுக்குப் பிடித்த வகையில் தேவைப்படும் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அல்லது தட்டச்சு செய்து பெற முடியும்.

Leonardo AI: இந்த AI கருவியின் சிறப்பு என்னவென்றால், நீங்கள் விரும்பும் புகைப்படங்களுக்கு நிகராக, பதிலுக்கு சிறப்பான நான்கு புகைப்படங்களை தரும். அளவில்லாமல் புகைப்படங்களை பெறுவதற்கு இந்த கருவியை பயன்படுத்த முடியும்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் முதல் AI சக்தி கொண்ட ஸ்மார்ட் போக்குவரத்து தொடக்கம்...
Best AI tools for image generation

Ideogram AI: இதுவும் மேலே கூறியது போல் நான்கு புகைப்படங்களை தரும். உங்களுக்கு தேவையான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, புதிய AI புகைப்படங்களாக பெற முடியும்.

Google AI studio: இந்த AI கருவிகளை பயன்படுத்தி சிறந்த AI புகைப்படங்களை பெற முடியும். அதேபோல் இதில் மற்றொரு சிறப்பு என்றால் வீடியோவையும் AI வீடியோவாக மாற்ற முடியும்.

Meta AI: இந்த Meta AI நமக்கு எல்லாம் தெரிந்த ஒன்றுதான். இதில் நமக்குத் தேவையான புகைப்படங்களை பெற அதற்கான prompt-யை தட்டச்சு செய்து நாம் நமக்கு தேவையான AI புகைப்படங்களை பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com