Philips களமிறக்கி இருக்கும் “அடி பொலி” Retro-Inspired ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்! 

Best Bluetooth Speakers
Best Bluetooth Speakers

Philips Audio நிறுவனம் சமீபத்தில் இந்திய சந்தையில் TAS2218 மற்றும் TAS2228 ஆகிய இரண்டு ப்ளூடூத் ஸ்பீக்கர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பீக்கர்கள் பார்ப்பதற்கு கிளாசிக் வடிவமைப்புடன் நவீன Connectivity அம்சங்கள் அனைத்தும் இணைத்து, பயனர்கள் தனித்துவமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் மற்றும் சந்தையில் கிடைக்கும் இதர தனித்துவமான ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம். 

1. Philips TAS2218 மற்றும் TAS2228

Philips TAS2218 மற்றும் TAS2228
Philips TAS2218 மற்றும் TAS2228

பிலிப்ஸ் TAS2218 மற்றும் TAS2228 ஸ்பீக்கர்கள் ரெட்ரோ-இன்ஸ்பயர்டு வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இது பழங்கால வடிவமைப்பை விரும்புபவர்களை நிச்சயம் ஈர்க்கும். இதில் ப்ளூடூத் 5.0, USB ப்ளேபேக், FM ரேடியோ மற்றும் மைக் போன்ற நவீன அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 10W ஒலி அளவை வெளியிடும் TAS2218 ரூபாய் 4490 எனவும், 20W ஒலி அளவை வெளியிடும் TAS2228 ரூபாய் 5490 எனவும் இந்தியா முழுவதும் ஆன்லைன் மற்றும் சில்லரை விற்பனைக் கடைகளில் கிடைக்கிறது. 

2. Amazon Echo Dot (5th Gen)

Amazon Echo Dot (5th Gen)
Amazon Echo Dot (5th Gen)

இது ஒரு ஸ்மார்ட் ப்ளூடூத் ஸ்பீக்கராகும். இணையத்தில் கனெக்ட் செய்து நேரடியாக உங்களுக்கு வேண்டிய பாடல்களை கேட்டுக் கொள்ளலாம். இதற்கு முந்தைய ஜெனரேஷன் மாடல்களை விட, அதிகப்படியான ஒலியை வழங்குகிறது. 44mm Front Firing ஸ்பீக்கர் வியக்கத்தக்க வகையில் ஒரு சூப்பரான ஆடியோ குவாலிட்டியை வழங்குகிறது. இதில் alexa சப்போர்ட், மோஷன் சென்சார் மற்றும் வெப்பநிலை சென்சார் ஆகியவை உள்ளன. 

3. The Tribit XSound Go

The Tribit XSound Go
The Tribit XSound Go

இது 16W ஒலி அளவைக் கொண்ட ஒரு சூப்பரான ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆகும். பார்ப்பதற்கு சிறிதாக இருந்தாலும் அதன் அளவைவிட அதிகப்படியான சத்தம் வெளியே வரும். இதில் இரண்டு 8W டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், துல்லியமான ஒலியை நீங்கள் அனுபவிக்கலாம். IPX7 வாட்டர் புரூபிங் அம்சம் கொண்ட இந்த ஸ்பீக்கர், 24 மணி நேர பேட்டரி ஆயுளைக் கொண்டதாகும். 

4.  Zebronics ZEB-COUNTRY

Zebronics ZEB-COUNTRY
Zebronics ZEB-COUNTRY

எனக்கு விலை குறைவாகவும் வேண்டும் தரமாகவும் வேண்டும் எனக் கேட்பவர்களுக்கு இந்த ஸ்பீக்கர் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த 3W ஸ்பீக்கரில் வயர்லெஸ் இணைப்பு, FM ரேடியோ மற்றும் அழைப்பை ஏற்ப்பதற்கான உட்கட்டமைப்பு போன்ற அனைத்தும் வழங்கப்படுகிறது. இணையத்தில் கிட்டத்தட்ட 75,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், இதுக்கு நல்ல ரேட்டிங் கொடுத்துள்ளனர். மேலும், இதன் எளிமையான மற்றும் பயனுள்ள அம்சங்களைப் பாராட்டியுள்ளனர்.‌

5. JBL Go 3

JBL Go 3
JBL Go 3

இது ஒரு சிறிய ரக அல்ட்ரா போர்ட்டபிள் ப்ளூடூத் ஸ்பீக்கராகும். பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் JBL நிறுவனத்தின் தரத்திற்கு ஏற்ப ஒலியை இது வழங்குகிறது. Go 3 வாட்டர் ப்ரூஃப், கரடு முரடான வடிவமைப்பை கொண்டு, சுமார் 5 மணி நேரம் வரை தொடர்ச்சியாக பாடக்கூடிய பேட்டரியைக் கொண்டுள்ளது.‌ சந்தையில் இருக்கும் சிறந்த மைக்ரோ ப்ளூடூத் ஸ்பீக்கர்களில் இதுவும் ஒன்றாகும். 

6. BoAt Stone 620

BoAt Stone 620
BoAt Stone 620

இன்னும் கொஞ்சம் வால்யூம் மற்றும் பாஸ் அதிகமாக விரும்புபவர்களுக்கு போட் ஸ்டோன் 620 ஒரு சிறந்த தேர்வாகும். இந்த 12W ப்ளூடூத் ஸ்பீக்கர் தொடர்ச்சியாக 10 மணி நேரம் வரை பாடக்கூடியதாகும். IPX4 வாட்டர் ப்ரூபிங் மற்றும் ஸ்டீரியோ ஒலிக்கு இரண்டு யூனிட்களை இணைக்கும் திறனும் உள்ளது. 

7. Amazon Basics 5W

Amazon Basics 5W
Amazon Basics 5W

பாஸ் எங்க கிட்ட அதிக காசு இல்ல, எந்த ஆடம்பரமும் இல்லாத ஒரு பட்ஜெட் ஸ்பீக்கரை சொல்லுங்க” எனக் கேட்டால் அமேசானின் சொந்த தயாரிப்பான Amazon Basics 5W ப்ளூடூத் ஸ்பீக்கரை நீங்கள் வாங்கலாம். வியக்கும் விதமாக இதற்கு 36 மணி நேரம் பிளே பேக் டைம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. 

8. Portronics SoundDrum P

Portronics SoundDrum P
Portronics SoundDrum P

இது பல அம்சங்களைக் கொண்ட ஒரு பல்துறை 20W ப்ளூடூத் ஸ்பீக்கர் ஆகும். இந்த ஸ்பீக்கரை தொடர்ச்சியாக 6-7 மணி நேரம் வரை நீங்கள் இயக்க முடியும். ப்ளூடூத் ஸ்பீக்கரை தொடாமலேயே வரும் அழைப்பை நீங்கள் ஏற்கலாம். மேலும் USB ஸ்லாட், ஆக்ஸ-In போர்ட் போன்றவையும் இதில் உள்ளது. அதிக சத்தத்தை விரும்புவோருக்கு இது சிறந்த ஸ்பீக்கராக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com