உங்க பட்ஜெட்டுக்கு ஏத்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ் எதுன்னு தெரிஞ்சுகணுமா?

Earbuds & Headphones
Earbuds & Headphones

வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ் இன்றைய வாழ்க்கையில் இசை, கேமிங் மற்றும் அழைப்புகளை மேம்படுத்தும் இன்றியமையாத கருவிகள். இசை ஆர்வலர்கள், மாணவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் அல்லது அலுவலக ஊழியர்களுக்கு இவை வயர்களின் சிக்கல் இல்லாமல் உயர்தர ஒலி மற்றும் வசதியை வழங்குகின்றன. முதன்மையான மூன்று வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்ஸ்களை உயர்தரம், நடுத்தரம், மற்றும் பட்ஜெட் - ப்ரெண்ட்லி என 3 பிரிவுகளில், அவற்றின் சிறப்பு அம்சங்களுடன் பார்க்கலாம்.

சிறந்த வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் (2025)

1. உயர்தரம்: House of Marley Positive Vibration XL ANC

விலை: ₹44,015

சிறப்பு அம்சங்கள்:

ஒலித்தரம்: 40mm ஹை-டெஃபனிஷன் டிரைவர்கள், ஆழமான பாஸ், சமநிலையான ஆடியோ - கிளாஸிக் Marley இசை அனுபவம்!

ANC: Active Noise Cancellation - சுற்றுப் புற சத்தத்தை குறைச்சு இசையில் மூழ்க வைக்கும்.

பேட்டரி: 26 மணி நேரம் (ANC ஆன்), 35 மணி (ANC ஆஃப்), USB-C குவிக் சார்ஜிங் - நாள் முழுக்க இசை!

வசதி: மெமரி ஃபோம் இயர்குஷன்கள், ஹெட்பேண்ட் பேடிங் - மணிக்கணக்கா கம்ஃபர்ட். FSC மரம், ரீசைக்கிள் அலுமினியம், REWIND ஃபேப்ரிக் - என்விரான்மென்ட் ஃப்ரெண்ட்லி!

கூடுதல்: ஆன்போர்டு மைக்ரோஃபோன், வாய்ஸ் கமாண்ட் ஆக்டிவேஷன், ரிமோட் கன்ட்ரோல் மூலம் வால்யூம், பாட்டு மாற்றம். iOS, Android உடன் இணக்கம்.

யாருக்கு?: இசை ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் உணர்வு உள்ளவர்கள், ஹோம் மற்றும் ஆபீஸ் யூஸர்களுக்கு இது ஒரு பிரீமியம் சாய்ஸ்!

2. நடுத்தரம்: Sennheiser PXC 550-II Wireless

விலை: ₹29,990

சிறப்பு அம்சங்கள்:

ஒலித்தரம்: Sennheiser-இன் லெஜண்டரி ஆடியோ கிளியர், உயர்தர இசை அனுபவம்!

ANC: அட்ஜஸ்டபிள் Active Noise Cancellation - சுற்றுப் புற சத்தத்தை உங்க விருப்பப்படி குறைக்கலாம்.

பேட்டரி: 30 மணி நேர பிளேபேக் - லண்டனில் இருந்து ஹாங்காங் வரை ஒரு சார்ஜில் ஓகே!

வசதி: இலகு வடிவமைப்பு, கேரி கேஸ் உடன் வருது - பயணத்துக்கு ஏத்தது.

கூடுதல்: ஒரு டச்சில் Siri, Google Assistant, Alexa-ஐ ஆக்டிவேட் பண்ணலாம். டச் பேட் மூலம் வால்யூம், பாட்டு மாற்றம், கால் கன்ட்ரோல் ஈஸி. Smart Pause (ஆப் மூலம்) மற்றும் ஆட்டோ ஆன்/ஆஃப் சென்சார்கள்.

யாருக்கு?: இசை ஆர்வலர்கள், நீண்ட பயணிகள், தரமான ஆடியோ விரும்புவோருக்கு இது ஒரு ஸ்டைலிஷ் சாய்ஸ்!

3. பட்ஜெட் - நட்பு: Glynzak WH207A

விலை: ₹5,546

சிறப்பு அம்சங்கள்:

ஒலித்தரம்: 40mm டிரைவர்கள், ஹை-ஃபை ஸ்டீரியோ, ஆழமான பாஸ். 6 EQ மோட்ஸ் (Bass, Pop, Rock, Classic, Jazz, Vocal) - இசையை உங்க ஸ்டைலுக்கு மாத்தலாம்!

ANC: சத்தம் தடுப்பு இல்லை, ஆனா கிளியர் ஆடியோ தருது.

பேட்டரி: 65 மணி நேர பிளேபேக், 2.5 மணி நேரத்தில் ஃபுல் சார்ஜ். 10 நிமிட சார்ஜில் 4 மணி நேரம் ஓடும்!

வசதி: PU லெதர் இயர்பேட்கள் - மென்மையானது, வாட்டர் ப்ரூஃப், காதை பாதுகாக்குது. அட்ஜஸ்டபிள் ஹெட்பேண்ட், எல்லா தலை அளவுக்கும் ஃபிட்!

கூடுதல்: 3.5mm ஆடியோ ஜாக் மூலம் வயர்டு மோட். பட்டன்கள் மூலம் வால்யூம், பாட்டு மாற்றம், பாஸ் எளிது. Bluetooth 5.3 உடன் வேகமான இணைப்பு.

யாருக்கு?: மாணவர்கள், இளைஞர்கள், நீண்ட பயணங்களுக்கு இசை விரும்புவோருக்கு இது ஒரு பட்ஜெட் மேஜிக்!

மொபைல்களுக்கான சிறந்த வயர்லெஸ் இயர்பட்ஸ் (2025):

4. உயர்தரம்: Apple AirPods 4 with ANC

விலை: ₹16,990

சிறப்பு அம்சங்கள்:

ஒலித்தரம்: Apple-டிசைன் செய்யப்பட்ட டைனமிக் டிரைவர், H1 சிப் உடன் Computational Audio - உயர்தர இசை அனுபவம். Personalised Spatial Audio மற்றும் டைனமிக் ஹெட் ட்ராக்கிங் உடன் Dolby Atmos-ல் தியேட்டர் மாதிரி ஒலி!

ANC: Pro-level Active Noise Cancellation, 2x சத்தத்தை குறைக்குது. Transparency Mode உடன் சுற்றுப் புறத்தை கேட்கலாம்.

பேட்டரி: 4 மணி நேரம் (ANC ஆன்), கேஸுடன் 20 மணி நேரம். ANC ஆஃப் செய்தால் 30 மணி நேரம் மொத்த பிளேபேக்.

வசதி: IP54 தூசி, வியர்வை, நீர் எதிர்ப்பு, மழை, கடுமையான உடற்பயிற்சிக்கு ஏற்றது. கலர்-மேட்ச் ஸ்மார்ட் கேஸ் உடன் வருது.

கூடுதல்: Personalised Spatial Audio உடன் டைனமிக் ஹெட் ட்ராக்கிங், Apple Watch Charger, USB-C அல்லது Qi-சான்று சார்ஜர் மூலம் வயர்லெஸ் சார்ஜிங்.

யாருக்கு?: உயர்தர ஆடியோ விரும்புவோர், இசை, மூவி, கேமிங் ஆர்வலர்களுக்கு இது ஒரு பிரீமியம் சாய்ஸ்!

5. நடுத்தரம்: OnePlus Buds 3

விலை: ₹5,499

சிறப்பு அம்சங்கள்:

ஒலித்தரம்: 10.4mm+6mm டூயல் டிரைவர்கள், LHDC5.0 CODEC உடன் ஆழமான பாஸ், மிருதுவான ட்ரெபிள், கிளியர் வோகல்ஸ் - இசை தியேட்டர் மாதிரி!

ANC: 49dB Smart Adaptive Noise Cancellation, சுற்றுப் புற சத்தத்தை தடுத்து ஆடியோவை மட்டும் உள்ள விடும்.

பேட்டரி: 7 மணி நேரம் (ANC ஆஃப்), கேஸுடன் 44 மணி நேரம். 10 நிமிஷ ஃபாஸ்ட் சார்ஜில் 7 மணி பிளேபேக்!

வசதி: IP55 தூசி, நீர் எதிர்ப்பு, ஜிம், மழை எல்லாம் ஓகே.

இதையும் படியுங்கள்:
விவோவின் புதிய T4 லைட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
Earbuds & Headphones

கூடுதல்: Sliding Volume Control - இயர்பட்ஸில் ஸ்லைடு பண்ணி வால்யூம் அட்ஜஸ்ட் பண்ணலாம். Dual Connection மூலமா Android, iOS, Windows டிவைஸ்களுக்கு ஈஸியா ஸ்விட்ச். Google Fast Pair உடன் வேகமா இணைப்பு.

யாருக்கு?: இசை ஆர்வலர்கள், பயணிகள், மல்டி-டிவைஸ் யூஸர்களுக்கு இது ஒரு ஸ்மார்ட் சாய்ஸ்!

6. பட்ஜெட் - நட்பு: boAt Airdopes 300

விலை: ₹1,399

சிறப்பு அம்சங்கள்:

மைக்குகள்: 4 மைக்ரோஃபோன்கள், AI-ENx டெக்னாலஜி மூலம் சத்தம் இல்லாத கால் குவாலிட்டி - எங்கிருந்தாலும் கிளியர் கால்ஸ்!

ஆடியோ: Cinematic Spatial Audio, 24-bit ஆடியோ ப்ராசசிங் - இசை, மூவி, கேமிங்கில் தியேட்டர் மாதிரி அனுபவம்!

பேட்டரி: 50 மணி நேர மொத்த பிளேபேக் - வீக்எண்ட் முழுக்க இசை, ஸ்ட்ரீமிங் ஓகே!

மல்டிபாயின்ட் கனெக்டிவிட்டி: இரண்டு டிவைஸ்களை ஒரே நேரத்தில் இணைக்கலாம் கால், மூவி, வேலை எல்லாம் ஈஸி!

இதையும் படியுங்கள்:
POCO F7 5G: கேமிங்கையும் கடினமான சவால்களையும் ஆளும் அசுர ஸ்மார்ட்போன்!
Earbuds & Headphones

இன்-இயர் டிடெக்ஷன்: இயர்பட்ஸை அணிந்தால் ஆடியோ பிளே, கழட்டினால் பாஸ், கால், இசை எல்லாம் ஆட்டோமேட்டிக்!

யாருக்கு?: மாணவர்கள், இளைஞர்கள், இசை மற்றும் மல்டி-டாஸ்கிங் ஆர்வலர்களுக்கு இது ஒரு பட்ஜெட் பட்டாசு!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com