பிரதமர் மோடிக்கு தமிழ் பேச உதவிய Bhashini AI தொழில்நுட்பம்!

Bhashini AI technology.
Bhashini AI technology.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போது தமிழில் பேசி நம்மை வியக்க வைப்பது எப்போதும் நடப்பது தான் என்றாலும், சமீபத்தில் வாரணாசியில் நடந்த தமிழ் சங்கத்தில் பேசும்போது அவருடைய உச்சரிப்பு முற்றிலும் புதிதாக இருந்தது. 

காசியில் நடந்த தமிழ் சங்கத்தில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு ரோபோவான Bhashini AI பயன்படுத்தி தமிழில் பேசியுள்ளார். இது அடிப்படையில் ஒரு ட்ரான்ஸ்லேட்டர் டூல் ஆகும். Bhashini என்பது மிக நேரத்தில் உடனடியாக எந்த மொழியாக இருந்தாலும் அதை ட்ரான்ஸ்லேட் செய்யக்கூடிய செயற்கை நுண்ணறிவு டூல். இதை டிஜிட்டல் இந்தியா பாஷினி என்றும் அழைக்கிறார்கள். 

இந்த செயற்கை நுண்ணறிவு ஜூலை அறிமுகம் செய்ததே பிரதமர் நரேந்திர மோடி தான். கடந்த ஜூலை மாதம் அறிமுகமான இந்த ட்ரான்ஸ்லேட் டூலை நரேந்திர மோடி இப்போதுதான் முதல் முறை பயன்படுத்தி பேசியுள்ளார். காசியில் நரேந்திர மோடி பேசியபோது அங்கிருந்து தமிழர்கள் புரிந்து கொள்ளும் விதமாக உடனடியாக பாஷினி அதை தமிழில் மொழிபெயர்த்துக் கூறியது. 

அந்த உரையில் பேசிய நரேந்திர மோடி, “நான் இந்த சாதனத்தை இப்போதுதான் முதல்முறையாக பயன்படுத்துகிறேன். செயற்கை நுண்ணறிவு வழியாக இந்த புதிய தொழில்நுட்பம் செயல்படுகிறது. இது ஒரு புதிய தொடக்கமாகும். நான் சொல்வது இங்கு உள்ள அனைவருக்கும் புரியும் என நம்புகிறேன்” எனக் கூறினார். 

பாஷினியை உருவாக்கிய அதன் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் கூற்றுப்படி, பாஷினியால் மொத்தம் 14 மொழிகளை தானாக ரெகக்னைஸ் செய்து, 22 மொழிகளில் ட்ரான்ஸ்லேஷன் மற்றும் 14 மொழிகளில் ஸ்பீச் சிந்தசிஸ் செய்ய முடியும். அதேபோல இந்த செயலியில் இருக்கும் மற்றொரு ஆப் மூலமாக நாம் கேட்கும் கேள்விகளை ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் அடையாளம் கண்டு அதற்கான பதில்களை துல்லியமாக வழங்கும். 

இதையும் படியுங்கள்:
போக்குவரத்து விதிமீறல்களை துல்லியமாகக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்!
Bhashini AI technology.

இந்த தொழில்நுட்பம் கல்வி அறிவு இல்லாதவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட பாடங்களில் இருந்து கேள்வி பதில்களை சிறப்பாக வழங்க முடியும். நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு புத்திசாலித்தனமான பதில்களைக் கொடுத்து நம்முடைய தேடல்களை எளிமையாக்குறது.   

இப்படி பல அம்சங்களை தன்னுள் வைத்திருக்கும் பாஷினி AI இனிவரும் காலங்களில் மக்களுக்கு மொழிபெயர்ப்பு சேவையை வழங்க பயன்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com