இந்த 6 விஷயங்களைப் பின்பற்றினால் உங்கள் இருசக்கர வாகனம் எப்போதும் புதிது போல இருக்கும். 

Bike Maintenance Tips.
Bike Maintenance Tips.

இப்போதெல்லாம் அனைவரது வீடுகளிலும் இருசக்கர வாகனம் இருக்கிறது. இளைஞர்களும் இரு சக்கர வாகனம் வாங்குவதை மிகப்பெரிய ஆசையாக வைத்துள்ளனர். ஆனால் விருப்பப்பட்டு வாங்கும் வாகனத்தை பெரும்பாலானவர்கள் முறையாக பராமரிப்பதில்லை. அவற்றை முறையாக பராமரித்தால் மட்டுமே நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும். அதே நேரம் உங்களுடைய பயணம் சுமூகமாக இருக்க வாகனத்தை முறையாக பராமரிப்பது அவசியமானது. 

அந்த வகையில் உங்களது வாகனம் எப்போதும் புதிய வாகனம் போலவே இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.

டயர் காற்று அளவு: வாகனம் வாங்கிய சில காலத்திலேயே வாகனத்தின் செயல் திறன் குறைந்து விட்டதாக சிலர் மெக்கானிக் ஷாப் கொண்டு செல்வார்கள். டயரில் போதிய அளவு காற்று இல்லாமல் போனால், அதன் செயல்திறன் வெகுவாக பாதிக்கும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. எனவே வாரம் ஒரு முறையாவது இருசக்கர வாகனங்களில் டயர்களில் போதிய அளவு காற்று இருக்கிறதா? என்பதை சரி பார்க்க வேண்டியது அவசியம்.  

இன்ஜின் ஆயில்: இருசக்கர வாகனங்களில் அத்தியாவசியமான என்ஜின் ஆயில், பிரேக் ஆயில் மற்றும் கூலண்ட் போன்றவை சரியாக உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள். மேலும் அவை அனைத்தும் நல்ல தரத்தில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்வது நல்லது. குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது இன்ஜின் ஆயிலை புதிதாக மாற்ற வேண்டும். 

பிரேக்கை சரி பாருங்கள்: இருசக்கர வாகனங்களில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது பிரேக்தான். இதன் முக்கியத்துவம் என்னவென்று உங்களுக்கே தெரிந்திருக்கும். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அலட்சியமாக இருந்தால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே தினமும் வெளியே செல்வதற்கு முன் பிரேக் எப்படி வேலை செய்கிறது என்பதை சரி பார்த்து வாகனத்தை இயக்குவது நல்லது. 

இதையும் படியுங்கள்:
மார்கழி மாத குளிருக்கு இதமான சில சூப் வகைகள்!
Bike Maintenance Tips.

முறையான சர்வீஸ்: மூன்று முதல் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நல்ல மெக்கானிக் ஒருவரிடம் வாகனத்தை சர்வீஸ் செய்து கொள்வது நீண்ட காலத்திற்கு உங்கள் வாகனம் நல்ல திறனுடன் இயங்க உதவும். சர்வீஸ் செய்தல் மட்டுமே நீங்கள் கண்டுபிடிக்க முடியாத பிரச்சனைகளையும் கண்டுபிடித்து அதற்கான தீர்வைக் காண முடியும்.

பேட்டரியை பராமரியுங்கள்: இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தில் இருக்கும் பேட்டரியைப் பற்றி அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. பேட்டரியில் ஏதாவது லூஸ் கனெக்சன் உள்ளதா? சரியான வோல்டேஜ் உள்ளதா என்பதை பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். 

குறிப்பாக தினசரி வாகனத்தை சுத்தம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இதை யாருமே செய்வதில்லை. விலை உயர்ந்த பைக்குகள் வைத்திருப்பவர்களும் வாகனத்தை சுத்தம் செய்யாமல் அப்படியே இயக்குவதை நான் பார்த்திருக்கிறேன். இப்படி இருந்தால் வாகனங்கள் விரைவில் பழுதாக வாய்ப்புள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com