AI தொடர்பான தன் கருத்தைக் கூறி பீதியைக் கிளப்பிய பில் கேட்ஸ்.. இன்னும் 5 வருஷம்தான் கண்ணா!

Bill Gates.
Bill Gates.
Published on

AI தொழில்நுட்பம் தற்போது உலகையே வேறு விதமாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தன் கருத்தைக் கூறியுள்ளார். 

தற்போது உலக அளவில் அதிகம் பேசப்படும் தொழில்நுட்பம் எதுவென்றால் அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்தான். குறிப்பாக ChatGPT வெற்றிக்குப் பிறகு பல தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களின் AI மாடல்களை உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர். மேலும் இதில் முதலீடு செய்பவர்களும் அதிகரித்துள்ளனர். எல்லா துறைகளிலும் இந்தத் தொழில்நுட்பம் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரத் தொடங்கியுள்ளது. அதேநேரம் இதனால் பலர் வேலை இழக்க வாய்ப்புள்ளதாகவும் டெக் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

இந்த தொழில்நுட்பம் சார்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் கூறுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த தொழில்நுட்பம் நாம் நினைத்துப் பார்க்காத வகையில் வேற லெவலுக்கு போகப்போகிறது. அதே நேரம் இதைக் கண்டு நாம் பயப்படவும் தேவையில்லை. இதன் மூலமாக பல புதிய வேலை வாய்ப்புகள் உருவாகப் போகிறது” என பில்கேட்ஸ் தனது கருத்தைத் தெரிவித்தார். 

ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் 40% வேலைகள் இல்லாமல் போகும் என தெரிவித்திருந்த நிலையில், இப்போது பில்கேட்ஸ் இந்தத் தொழில்நுட்பத்தை பாராட்டி இருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது. 

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் போன்கள் இனி தேவையில்லை.. வந்துவிட்டது Rabbit தொழில்நுட்பம்! 
Bill Gates.

அத்துடன் “ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் அறிமுகமாகும் போதும் அச்சம் ஏற்படத்தான் செய்யும். இதனால் வேலை வாய்ப்புகள் பறிபோகும் என பீதியைக் கிளப்புவார்கள். ஆனால் அப்படி மோசமாக எதுவும் நடக்காது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விவசாயத்தைத் தவிர வேறு எதுவும் உலகில் சிறப்பாக இருக்காது என நினைத்தோம். ஆனால் இப்போது அதை தாண்டி பல புதிய வேலைகள் உலகில் உருவாகி மக்களுடைய வாழ்க்கை மேம்பட்டிருக்கிறது. இந்த AI தொழில்நுட்பமும் அதே போல தான். இதனால் மக்களுடைய வாழ்க்கை முற்றிலும் எளிதாகப் போகிறது. இது கணினி மற்றும் மொபைல் போனை விட சிறப்பாக தொழில்நுட்பத்தை அணுக உதவும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இப்படி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக நேர்மறை கருத்துக்களை பில்கேட்ஸ் கூறியது வியப்பை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com