இடைத்தரகர் இல்லாத டிஜிட்டல் புரட்சி! பிளாக்செயின் தொழில்நுட்பம் என்றால் என்ன?

blockchain-technology
blockchain-technology
Published on

பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain Technology) என்பது இடைத்தரகர்கள் இல்லாமல், தரவுகளைப் பாதுகாப்பாக, மாற்ற முடியாத வகையில் பரவலாக்கப்பட்ட லெட்ஜரில் (Decentralized Ledger) சேமிக்கும் ஒரு டிஜிட்டல் தொழில்நுட்பமாகும். இது இடைத்தரகர்களை நீக்கி, வெளிப்படைத்தன்மை, அதிவேக பரிவர்த்தனைகள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்கிறது. கிரிப்டோகரன்சி, நிதி, சப்ளை செயின், ஹெல்த்கேர் மற்றும் அரசுத்துறை போன்ற பல்வேறு துறைகளில் இது புரட்சிகரமான பயன்களை அளிக்கிறது.

பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்கள்:

* மேம்பட்ட பாதுகாப்பு (Enhanced Security):

பிளாக்செயினில் பதியப்படும் தரவுகளை மாற்றவோ, அழிக்கவோ முடியாது. இது ஹேக்கிங் மற்றும் மோசடிகளைத் தடுக்கிறது. இது குறியீட்டு முறை (Cryptography) மற்றும் பரவலாக்கப்பட்ட லெட்ஜர் மூலம் தரவுகளை பாதுகாப்பதால் ஹேக் செய்வது மிகவும் கடினம்.

* வெளிப்படைத்தன்மை (Transparency):

அனைத்து பரிவர்த்தனைகளும் பொது லெட்ஜரில் பதியப்படுவதால், நெட்வொர்க்கில் உள்ள அனைவரும் அதைக் காணமுடியும். இதனால் மோசடிகள் குறையும். இது நம்பிக்கையை அதிகரிக்கிறது.

* இடைத்தரகர்கள் நீக்கம் (Decentralisation):

வங்கி அல்லது மூன்றாம் தரப்பு நிறுவனங்கள் இல்லாமல், பயனர்கள் நேரடியாகத் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம். இதனால் நேரமும், செலவும் குறைகிறது.

* ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் (Smart Contracts):

ஒப்பந்த நிபந்தனைகள் தானாகவே நிறைவேற்றப்படும் (Self-executing contracts). அதாவது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் தானாகவே செயல்படும் ஒப்பந்தங்கள் மூலம், நம்பகமான மற்றும் விரைவான ஒப்பந்தங்களை நிறைவேற்ற முடியும். உதாரணமாக ஒரு பொருள் கைமாறியவுடன் பணம் தானாகவே பரிமாற்றப்படும்.

இதையும் படியுங்கள்:
டயர்களில் உள்ள எண்களின் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
blockchain-technology

* சப்ளை செயின் மேலாண்மை (Supply Chain Management):

ஒரு பொருளின் உற்பத்தியிலிருந்து வாடிக்கையாளரை சென்றடையும் வரை உள்ள அனைத்து நிலைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

* நிதி மற்றும் வங்கித்துறை (Finance):

எல்லை கடந்த பண பரிவர்த்தனைகளை (Cross-border remittances) குறைந்த செலவிலும், அதிவேகமாகவும் செய்ய முடிகிறது.

* டிஜிட்டல் அடையாளம் மற்றும் தரவு பாதுகாப்பு (Digital Identity):

மின்னணு மருத்துவப் பதிவுகள்(Healthcare records) மற்றும் நிலப் பதிவுகள் போன்றவற்றை பாதுகாப்பாக சேமிக்க பயன்படுகிறது.

* வாக்குப்பதிவு முறை (Voting Systems):

பாதுகாப்பான மற்றும் மோசடியற்ற தேர்தல் நடத்த பிளாக்செயின் பயன்படுத்தப்படலாம்.

* பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது தரவுப் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அதிநவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பாகும்.

* முக்கிய பயன்பாட்டுத் துறைகள்: கிரிப்டோகரன்சி: பிட்காயின் (Bitcoin) மற்றும் இத்தீரியம் (Ethereum)போன்ற டிஜிட்டல் நாணயங்கள் பிளாக்செயினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்றன.

* சுகாதாரம் (Healthcare): நோயாளிகளின் மருத்துவத் தரவுகளைப் பாதுகாப்பாக நிர்வகிப்பதும், தேவைப்படும்போது மருத்துவர்கள் அணுகக் கூடிய வகையிலும் சேமிக்கப் பயன்படுகிறது.

* வணிகம் (Logistics): பொருட்களை கண்காணித்தல்.

* அரசுத்துறை: நிலப்பதிவுகள், டிஜிட்டல் அடையாள மேலாண்மை மற்றும் வாக்களிப்பு முறைகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர இது உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com