சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ராவின் BMW M பதிப்பு - தென்கொரியாவில் மட்டுமே!

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ராவின் BMW M பதிப்பு - தென்கொரியாவில் மட்டுமே!

உலகெங்கிலும், சாம்சங் கேலக்ஸி  S வகையைச் சேர்ந்த திறன்பேசிகள் மிகவும் பிரபலமானவை. இதில் கடைசி பதிப்பான கேலக்ஸி S22 அல்ட்ரா திறன்பேசி விற்பனையில் சக்கைப்போடு போட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டு தென்கொரியாவில், கேலக்ஸி S22 Ultra Mercedes Benz பதிப்பு பிரத்தியேகமாக வெளியிடப்பட்டது. 

இந்த ஆண்டு அதன் வரிசையில், ஜெர்மன் நாட்டின் மிகவும் பிரபலமான, மகிழுந்து உற்பத்தி செய்யும் நிறுவனமான, BMW கைகோர்த்துள்ளது. இந்த வகை திறன் பேசிக்கு Samsung Galaxy S23 அல்ட்ரா BMW M பதிப்பு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரக திறன்பேசியை ஒருவர் வாங்கும்போது, ஒரு BMW கார் போன்ற பெட்டியில் வைத்துக் கொடுப்பார்கள். BMW M3 E30 மகிழுந்தை அடிப்படையாகக் கொண்டு அந்த பெட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை வாங்கும்போது, BMW மகிழுந்து சார்ந்த பல பொருட்களையும் உள்ளே வைத்திருப்பார்கள். அந்த மகிழுந்தின் புகைப்படம் கொண்ட திறன்பேசி கேஸ், 6 BMW சின்னம் பொறித்த சக்கரம், நிறுவனத்தின் 50வது ஆண்டு விழாவின்போது வெளியிடப்பட்ட 'We Are M' என்ற உலோக லோகோ, பேட்டரி மூலம் இயங்கும், சக்கரங்களுக்கு காற்று நிரப்பும் சாதனம், ஒரு கடிகாரம், சார்ஜர், மேலும் சில புகைப்பட போஸ்டர்களை உள்ளே வைத்துக் கொடுப்பார்கள். அதனோடு, தென் கொரியாவில் உள்ள BMW ஷோரூமில் அதை ஓட்டி பார்ப்பதற்கான ஒரு சிறப்பு கூப்பனும் அளிக்கப்படுகிறது.

என்னதான் இதில் இத்தனை பொருட்கள் மற்றும் சலுகைகள் வழங்கினாலும், இந்த வகை திறன்பேசி தென் கொரியாவில் மட்டுமே விற்பனையாகும் என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் வெறும் 1000 ஸ்மார்ட்போன்கள் மட்டுமே உருவாக்கி உள்ளார்களாம். 12/512GB நினைவகத் திறன் கொண்ட ஒரு திறன்பேசியின் விலை, இந்திய மதிப்பில் சுமார் 1,12000 ரூபாயாகும். இதே நினைவகத் திறன் கொண்ட சாதாரண S23 அல்ட்ராவின் விலை 1,04,000 ரூபாய் ஆகும். 

இந்தியாவில் இந்தத் திறன்பேசியின் விலையின் தொடக்கமே 1,25,000 ரூபாய். அடுத்தடுத்த நினைவுத்திறன் கொண்ட பதிப்புகளின் விலை மேலும் அதிகம். இந்தத் திறன் பேசியை நீங்கள் வாங்குவீர்களா மாட்டீர்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com