ஆகாயத்தின் ராணி 'போயிங் 747': உலகைப் புரட்டிப்போட்ட ஒரு ஜம்போ ஜெட் கதை!

வெறும் 29 மாதங்களில் உருவாக்கப்பட்டு 590 கோடி பயணிகளைச் சுமந்த வரலாற்றுப் பயணம்!
போயிங் 747 - Boeing 747
போயிங் 747 - Boeing 747AI Image
Updated on

லகின் பிரசித்தி பெற்ற போயிங் விமான நிறுவனத்தை உருவாக்கியது வில்லியம் போயிங் என்ற அமெரிக்க யேல் யுனிவர்சிட்டியின் படிப்பை பாதியில் விட்ட என்ஜினியரிங் மாணவர். படிப்பை பாதியில் விட்டதால் தன்னுடைய தந்தையின் மரக்கடை வியாபாரத்தில் தன்னை இணைத்துக்கொண்ட வில்லியம் போயிங் 1903 ம் ஆண்டு அமெரிக்க ஷாட்டில் எனும் இடத்தில் துவங்கியதுதான் உலகப் புகழ் பெற்ற போயிங் விமான நிறுவனம்.

1945 ஆம் ஆண்டில் போயிங் நிறுவனத்தின் (The Boeing Company-) தலைவராகப் பொறுப்பேற்றார். பில் எலன் (Bill Allen) எனப்படும் William McPherson Allen, அவர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர். உறுதியான வாடிக்கையாளர்கள் எவரும் இல்லாத நிலையில், $16 மில்லியன் சொந்த நிதியை முதலீடு செய்து போயிங் 'Dash 80' (707 மாதிரி) முன்மாதிரி விமானத்தை உருவாக்க உத்தரவிட்டார்.

இது "கம்பெனியைப் பந்தயம் வைக்கும் செயல்" என்று வர்ணிக்கப்பட்டது. 1945 முதல் 1968 வரை பணியாற்றிய இவரது பதவிக்காலத்தில் போயிங் நிறுவனம் உலகளாவிய வணிக விமானப் போக்குவரத்து சந்தையில் முதலிடத்தைப் பிடித்தது.

போயிங் 707, 727, 737 மற்றும் 747 போன்ற மிக வெற்றிகரமான விமானங்களை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தார்.

1960களின் நடுப்பகுதியில், போயிங் 747 திட்டத்தின் தலைமைப் பொறியாளராக ஜோ சூட்டர்(Joseph Frederick Sutter ) நியமிக்கப்பட்டார். நூற்றுக்கணக்கான பயணிகளை நீண்ட தூரம் ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட, உலகின் முதல் அகலமான “ஜம்போ ஜெட்” விமானத்தை உருவாக்குவதே இந்த லட்சியத் திட்டத்தின் நோக்கமாக இருந்தது. போயிங் 747-ஐ வடிவமைத்து மேம்படுத்துவதில், சூட்டர் ஒரு பொறியாளர் குழுவை வழிநடத்தினார்.

747 குழுவிற்குத் தலைமை தாங்க நியமிக்கப்படுவதற்கு முன்பு, சிறிய நகரங்களுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட மூன்று என்ஜின்கள் கொண்ட 727 விமானத்தின் தூக்குவிசையை மேம்படுத்துவதற்காக ஒரு தனித்துவமான இறக்கை வடிவமைப்பிற்குப் பங்களித்ததற்காக ஜோ சூட்டர் பாராட்டப்பட்டார்.

737 விமானத்தில் , அதன் என்ஜின்களை இறக்கை களுக்குக் கீழே வைக்கும் ஒரு வடிவமைப்பை உருவாக்க அவர் உதவினார். இது அகலமான விமான உடற்பகுதிக்கும் அதிக சரக்குக் கொள்ளளவிற்கும் வழிவகுத்தது. 747 விமானத்தில் சூட்டர் தனித்துவமான கூன்முதுகு போன்ற மேல் தளம் உட்பட எண்ணற்ற தொழில்நுட்பப் புதுமைகளை புகுத்தினார்.

போயிங் 747 - Boeing 747
போயிங் 747 - Boeing 747

இது கூடுதல் இருக்கை வசதியை அளித்து, விமானத்தை மேலும் பல்துறை பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றியது. இதன் காரணமாகவே இதனை' வானத்தின் ராணி ' என்று செல்லமாக அழைத்தனர்.

உலகின் மிகப்பெரிய விமானமான போயிங் 747 உருவாக்கும் எண்ணம் உதித்த நாளிலிருந்து 29 மாதங்களில் முழு உருவமாக வெளிவந்து உலகையே வியக்க வைத்தது. 4500 பொறியாளர்கள் கொண்ட ஒரு குழு, முதல் 747 விமானத்தை முழுமையாக வடிவமைத்து உருவாக்கியது.

இதன் தயாரிப்பு குழுவை ' விவரிக்க முடியாத ஆற்றல் ' கொண்ட டீம் என்று அந்நாளில் உலகமே பாராட்டியது. அந்நாளில் போயிங் 747 ,400 பேர்களை சுமந்து 14,000 கிமீ இடை நிற்காமல் தொடர்ந்து செல்லும் படி வடிவமைக்கப்பட்டது. இதன் மூளையாக செயல்பட்டவர் ஜோ சூட்டர் ( Joe Sutter) என்பதால் அவர் போயிங் '747 ஜாம்போ ஜெட் விமானத்தின் தந்தை ' என புகழப்பட்டார். போயிங் 747, வணிக விமானப் போக்குவரத்தில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான புதிய அளவுகோல்களை அமைத்தது.

1968 ம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று முதல் போயிங் 747 விமானம் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள எவரெட்டில் தயாரானது .1970-ல் போயிங் 747 விமானத்தின் அறிமுகம் விமானப் பயணத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. அந்த விமானத்தின் பெரிய அளவும் கொள்ளளவும், விமான நிறுவனங்கள் அதிகப் பயணிகளையும் சரக்குகளையும் நீண்ட தூரங்களுக்குக் கொண்டு செல்ல வழிவகுத்தன.

இதனால், சர்வதேசப் பயணம் மேலும் எளிதாகவும் மலிவாகவும் ஆனது. போயிங் 747 விமானம் 55 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியில் நீடித்தது, 1550-க்கும் மேற்பட்ட விமானங்கள் விற்பனையாகி, வர்த்தக விமானப் போக்குவரத்தின் சின்னமாக விளங்கியது. போயிங் 747 1990 களில் அமெரிக்க அதிபரின் அதிகாரப் பூர்வமான விமானமாக மாறியது. அதன் பின்னர் அது விமான சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

சுமார் 150 மில்லியன் டாலர் செலவில் முதல் விமானம் உருவாக்கப்பட்டது .எல்லா விமானங்களையும் போலவே, போயிங் 747-400 விமானமும் ஏராளமான சிறுசிறு பாகங்களால் ஆனது. உண்மையில், போயிங் 747-400 விமானத்தில் சுமார் 6 மில்லியன் தனித்தனி பாகங்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
80 ஆண்டு கால கெத்து! உலகையே சுழற்ற வைத்த ‘வெஸ்பா’ ஸ்கூட்டரின் மாஸ் ஹிஸ்டரி!
போயிங் 747 - Boeing 747

இந்தப் பாகங்களில் சுமார் 171 மைல் நீளமுள்ள மின் வயரிங் மற்றும் சுமார் 5 மைல் நீளமுள்ள குழாய்களும் அடங்கும்.1991-ல், எத்தியோப்பியாவிலிருந்து ஒரு மீட்புப் பணியின்போது, எல் அல் 747 ரக விமானம் ஒன்று நம்பமுடியாத வகையில் 1,088 பேரை ஏற்றிச் சென்று, ஒரே விமானத்தில் அதிக நபர்களை ஏற்றிச் சென்று சாதனை படைத்தது. 747 ரக விமானங்கள் கடந்த 50 ஆண்டுகளில் பறந்த தூரம் ஏறத்தாழ 57 பில்லியன் மைல்கள்.

இது 1,37,000 முறை நிலாவிற்கு சென்று வரும் தூரம் .இது வரை பயணம் செய்த பயணிகள் 590 கோடி, இது தற்போதைய உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 80 சதவீதம் ஆகும்.

இதையும் படியுங்கள்:
உலகின் முதல் சோலார் ஆம்புலன்ஸ் 'ஸ்டெல்லா ஜூவா': கிராமப்புற மருத்துவத்தில் புதிய புரட்சி!
போயிங் 747 - Boeing 747

போயிங் நிறுவனம் அதன் வணிக விமானப் பிரிவின் முக்கிய பொறியியல் கட்டிடமான, எவரெட் கட்டிடத்திற்கு 'ஜோ சூட்டர் கட்டிடம் 'எனப் பெயர் மாற்றி போயிங் 747 வடிவமைப்பில் மூளையாக செயல்பட்ட அவரை பெருமைப் படுத்தியது . 'அட்லஸ் ஏர் 'நிறுவனம் 1,574-வது மற்றும் இறுதி 747 விமானமான, அதன் கடைசி 747 (N863GT)-ல், ஜோசூட்டர் படம், முதல் 747 விமானம், அவரது பெயர் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டி ஜோ சூட்டரை பெருமைப்படுத்தியது.

logo
Kalki Online
kalkionline.com