கரண்ட் பில் கட்ட தேவையில்லை... ஒரு உருளைக்கிழங்கு இருந்தால் ஒரு மாதம் முழுவதும் வீட்டை ஒளிர வைக்கலாம்!

Potato Battery
Potato Battery
Updated on

மின்சாரம் இல்லாத நேரங்களில் இருட்டில் தவிப்பது நமக்குப் பழகிப்போன ஒன்றுதான். ஆனால் நமது சமையலறையில் இருக்கும் ஒரு சாதாரண காய்கறியை வைத்து அந்த இருட்டை நிரந்தரமாக விரட்ட முடியும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். 

இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் உருளைக்கிழங்கை வைத்து ஒரு மாபெரும் அறிவியல் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர். அதை சாதாரணமாக சமைப்பதற்கு பதிலாக ஒரு சிறிய ட்ரிக் செய்தால், அது ஒரு அட்டகாசமான பேட்டரியாக மாறி வீட்டை ஒளிரச் செய்யும். 

எட்டு நிமிடம் போதும்!

பச்சையான உருளைக்கிழங்கை அப்படியே பயன்படுத்தினால் அதிலிருந்து பெரிய அளவில் ஆற்றல் கிடைக்காது. ஆனால், அதை சரியாக எட்டு நிமிடங்கள் சுடுநீரில் போட்டு வேகவைக்கும்போது ஒரு அற்புதமான ரசாயன மாற்றம் நடக்கிறது. அதன் உள்ளே இருக்கும் செல்களின் சுவர்கள் மென்மையாகி உடைந்து விடுகின்றன.

இதனால் மின்சாரம் எந்த ஒரு தடங்கலும் இல்லாமல் மிக வேகமாக பாயத் தொடங்குகிறது. சாதாரணமாக கிடைக்கும் மின்சாரத்தை விட, இப்படி வேகவைப்பதன் மூலம் சுமார் பத்து மடங்கு அதிகமான கரண்ட் நமக்கு கிடைக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு எந்த கெடுதலும் செய்யாத ஒரு சிறப்பான இயற்கை பேட்டரி ஆகும்.

கரண்ட் எப்படி உருவாகிறது?

உருளைக்கிழங்கிற்குள் இயற்கையாகவே மின்சாரம் ஒளிந்திருக்கவில்லை. அது ஒரு வகையான பாலமாக மட்டுமே செயல்படுகிறது. துத்தநாகம் பூசப்பட்ட ஒரு ஆணியையும், ஒரு செப்பு நாணயத்தையும் அந்த காய்கறிக்குள் சொருகி வைக்கும்போது உள்ளே ஒரு வேதியியல் மாற்றம் நிகழ்கிறது. உள்ளே இருக்கும் பாஸ்போரிக் அமிலத்துடன் துத்தநாகம் வினைபுரிந்து எலக்ட்ரான்களை வெளியிடுகிறது. இந்த எலக்ட்ரான்கள் செப்பு நாணயத்தை நோக்கி வயர் வழியாக ஓடும்போது நமக்கு தேவையான மின்சாரம் உற்பத்தியாகி ஒரு LED பல்பு பிரகாசமாக எரிகிறது.

இதையும் படியுங்கள்:
ஒத்தையா உள்ள முடி கத்தையா வளரணுமா? இதை ட்ரை பண்ணுங்க!
Potato Battery

ஒரு மாதம் தாங்குமா?

இதை வைத்து ஒரு மாதம் முழுவதும் பல்பு எரியுமா என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். இதற்கான பதில் ரொம்பவே பாசிட்டிவ்வானதுதான். ஒரு முழு காய்கறியில் இருந்து மிகக் குறைந்த அளவிலான வோல்டேஜ் மட்டுமே கிடைக்கும். அதனால், வேகவைத்த காய்கறியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்ச்சியாக இணைக்க வேண்டும். இப்படி ஒரு சிறிய சர்க்யூட் அமைத்துவிட்டால், காய்கறி முழுவதுமாக அழுகிப் போகும் வரை தொடர்ந்து முப்பது நாட்களுக்கு மேல் ஒரு சிறிய பல்பை நம்மால் எரிய வைக்க முடியும். காய்ந்து போன உருளைக்கிழங்குகள் கூட கரண்டை கடத்தும் வேலையை கச்சிதமாக செய்கின்றன.

உலகம் முழுவதும் 120 கோடி மக்கள் இன்னமும் சரியான மின்சார வசதி இல்லாமல் ரொம்பவே சிரமப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வாக இது மாறப்போகிறது. கடைகளில் விற்கும் வழக்கமான பேட்டரிகளை வாங்குவதைவிட இது ஐம்பது மடங்கு குறைவான செலவை மட்டுமே எடுக்கும்.

இதையும் படியுங்கள்:
எலான் மஸ்க் பயன்படுத்தும் 'தக்காளி' ரகசியம்!
Potato Battery

அதேபோல கிராமங்களில் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விளக்குகளை விட இது ஆறு மடங்கு மலிவானது. மண்ணெண்ணெய் விளக்கில் இருந்து வரும் புகையோ அல்லது தீவிபத்து ஏற்படும் அபாயமோ இதில் கொஞ்சமும் கிடையாது. இது இரவில் படிப்பதற்கும் ரொம்பவே பாதுகாப்பான ஒரு வெளிச்சத்தை கொடுக்கிறது.

நமது வீட்டில் சாதாரணமாக இருக்கும் ஒரு காய்கறியில் இவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என்பது நிஜமாகவே ஒரு மாபெரும் ஆச்சரியம்தான். பெரிய கண்டுபிடிப்புகள் எல்லாமே சில நேரங்களில் இது போன்ற மிக எளிமையான விஷயங்களில் இருந்துதான் தொடங்குகின்றன.

logo
Kalki Online
kalkionline.com