Buying a new smartphone in 2024.
Buying a new smartphone in 2024.

2024 இல் புது ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா? போச்சி.. இத முதலில் தெரிஞ்சிக்கோங்க!

Published on

கடந்தசில ஆண்டுகளாகவே இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையானது தொடர்ந்து வளர்ச்சியை சந்தித்து வரும் நிலையில், பயனர்களும் தங்களுக்கு எது போன்ற ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் வாங்கலாம் என்பது போன்றவற்றை தொடர்ந்து இணையத்தில் தேடி தகவல்களை சேகரித்து வருகின்றனர். சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் எதை வாங்கலாம் என முடிவெடுக்கின்றனர். 

எனவே இந்த பதிவில் 2024ல் புதிதாக ஸ்மார்ட் போன் வாங்க நினைப்பவர்கள் எதுபோன்ற விஷயங்களை கவனிக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளலாம். 

கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் அதிகமான ஸ்மார்ட் போன் வாங்கும் பயனர்கள் தங்களின் சாதனத்தின் செயல்திறன் எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு வாங்கும் முடிவை எடுக்கின்றனர். மேலும் 66 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் கேமிங் மற்றும் கிராபிக்ஸ் திறன்களை கருத்தில் கொண்டு வாங்குகின்றனர்.  60% க்கு அதிகமான பயனர்கள் 5ஜி இணைப்பு இருக்கிறதா என்பதை கவனித்து வாங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகிறது. 

ஒவ்வொரு ஆண்டும் 77% ஸ்மார்ட் போன் பயனர்கள் தங்கள் சாதனத்தின் சிப்செட் மேம்படுத்தப்படுகிறதா என்பதை கவனித்து வாங்குவதாகவும் சர்வே குறிப்பிட்டுள்ளது. எனவே இதன் மூலமாக பயனர்கள் தங்கள் வாங்கும் சாதனங்களில் தரம் வாய்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதற்கு முக்கியத்துவம் தருவது தெரிகிறது. 

எனவே நீங்களும் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கப் போகிறீர்கள் என்றால், முதலில் அதன் சிப்செட் எவ்வளவு தரம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு வாங்குங்கள். தற்போது வெளிவரும் பெரும்பாலான ஸ்மார்ட் சாதனங்களில் ஹை என்டு சிப்செட் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள், சாம்சங், கூகுள் பிக்சல் போன்ற ஸ்மார்ட்போன்களின் செயல் திறனுக்கு அதில் பயன்படுத்தப்பட்டுள்ள தரமான சிப்ஸ்செட்டுகளே காரணம். 

இதையும் படியுங்கள்:
தினமும் மூன்று வேளை உணவு: இந்து மதம் சொல்வதென்ன?
Buying a new smartphone in 2024.

இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் வாங்க விரும்புபவர்கள் மீடியா டெக் சிப் செட்டுகள் குறித்து அதிகம் தெரிந்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கிட்டத்தட்ட 31 சதவீதம் ஷேர் சந்தையில் இந்த சிப்செட்டுக்கு உள்ளது. 2023 ஆம் ஆண்டின் சிறந்த சிப்செட் பிராண்டாக இது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

எனவே இந்த ஆண்டு நீங்கள் ஏதாவது புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், முதலில் அதன் சிப்செட் தரம் வாய்ந்ததாக இருக்கிறதா என்பதை கருத்தில் கொண்டு உங்கள் முடிவை எடுங்கள். அதிக அம்சங்கள் கொண்டு விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக மோசமான சிப் உள்ள ஸ்மார்ட்போனை வாங்கினால், அதன் செயல்திறன் கொஞ்ச காலத்திலேயே குறைந்து, உங்களது பயன்பாட்டை மோசமாகிவிடும்.

logo
Kalki Online
kalkionline.com