காற்றை மாசுபடுத்தாத கார்பன் இல்லாத விமானம்!

Carbon-free plane.
Carbon-free plane.
Published on

காற்றை மாசு படுத்தாத கார்பன் உமிழ்வுத்தன்மை இல்லாத நவீன விமானம் உருவாக்கம்.

விமான பயன்பாட்டில் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ள அமெரிக்கா சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத விமானங்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்காக அமெரிக்காவின் முன்னணி விமான நிறுவனங்கள் புதிய வகையான விமான தயாரிப்புக்கு முன்னுரிமை கொடுத்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி விமான நிறுவனம் 100 சதவீதம் திரவ ஹைட்ரஜன் எரிபொருளைக் கொண்டு இயங்கும் முதல் விமானத்தை வடிவமைத்து இருக்கிறது. இந்த விமானத்திற்கு H2FLY என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த விமானம் திரவ வடிவிலான ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு பறக்கும் தன்மை கொண்டது. மேலும் இதனுடைய வடிவத்திலும் முழுமையான மாற்றத்தை செய்திருக்கின்றனர்.

இன்ஜினியிலும் இயல்பை விட பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை இணைத்து வடிவமைத்து இருக்கின்றனர். இந்த விமானம் 33 பேரை சுமந்து பயணிக்க கூடியதாகவும் உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த விமானத்தில் கார்பன் உமிழ்வுத்தன்மை இல்லை என்பதால் காற்று மாசு முழுமையாக தடைபடும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
'கழுதை விமானம்' மூலமாக அமெரிக்காவினுள் நுழைய முயற்சிக்கும் இந்தியர்கள்!
Carbon-free plane.

இதனால் மாசற்ற விமானம் என்ற பெருமையை H2FLY பெரும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிகிறது. மேலும் விமானம் 15 ஆயிரம் கிலோமீட்டர் வரை பறக்கும் தன்மை கொண்டது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த விமானம் பயணிகளை சுமந்து பயணிக்க தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com