சந்திராயன்4: ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா!

CHANDRAYAN
CHANDRAYAN
Published on

நிலவை ஆய்வு செய்ய சந்திராயன் 4 திட்டத்தை செயல்படுத்த இந்தியா மற்றும் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

நிலவை ஆய்வு செய்ய உலகில் இருக்கக்கூடிய பல்வேறு நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த வரிசையில் இந்தியா 4வது நாடாக வெற்றியைக் கண்டிருக்கிறது. சந்திராயன் ஒன்று விண்கலம் மூலம் நிலவின் தென் பகுதியில் நீர் இருப்பதற்கான ஆதாரம் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து சந்திராயன் 2 நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்ய முற்பட்டபோது விபத்துக்குள்ளானது.

அதன் நீட்சியாக சந்திராயன் 3 பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தற்போது சந்திராயன் 3 வெற்றிகரமாக நிலவில் தர இறங்கி லாண்டர் தன்னுடைய ஆய்வு பணிகளை செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் ஜப்பானின் நிர்வாணமான ஜாக்ஸா ஆகிய நிறுவனங்கள் சந்திரனை ஆய்வு செய்ய ஒப்பந்தம் செய்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டினுடைய விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து சந்திராயன் 4 உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

சந்திராயன் 4யில் உள்ள கருவிக்கு LUPEX என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது முழுக்க ரோபோட்டிக் இயந்திரத்தை கொண்ட தொழில்நுட்பமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ரோபோடிக் தொழில்நுட்பம் கொண்ட ரோவர், லேண்ட் என்று இரண்டு பிரிவுகளாக அவை உருவாக்கப்பட இருக்கிறது.

இதற்காக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் ஜப்பான் மற்றும் இந்திய விஞ்ஞானிகள் இடையே இரண்டு வாரத்திற்கு முன்பு ஆலோசனை நட த்தப்பட்டு இதில் முழு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வடிவிலான ரோபோடிக் இயந்திரத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் லேண்டெர் தொழில்நுட்பத்தை இந்திய விஞ்ஞானிகளும், ரோவர் தொழில்நுட்பத்தை ஜப்பான் விஞ்ஞானிகளும் உருவாக்க உள்ளனர்.அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சந்திராயன் 3 சேகரிக்கும் தரவுகள், புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சந்திராயன் 4 ஆறு மாத ஆயுட்காலம் கொண்டது, லேண்டெர் ரோவர் இரண்டும் 350 கிலோ எடை கொண்டதாக இருக்கும், ரோவரில் நிலவில் துளையிடுவதற்கு வசதியாக இயந்திர கைகள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் இதன் மூலம் மண்ணின் படிமம், நீர் மூலக்கூறு சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு சந்திராயன் 4 திட்டத்தை செயல்படுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com