Magma ocean on the moon
Magma ocean on the moon

நிலவில் மாக்மா கடலை கண்டறிந்த சந்திராயன்!

Published on

சந்திரயான் திட்டங்களின் அடிப்படையில் இஸ்ரோ நிலவை ஆராய்ச்சி செய்து வருகிறது. இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள் சந்திராயன் 3  நிலவின் தென் துருவத்தில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்தது. நிலவில் பரப்பில் இறங்கிய 4வது நாடு இந்தியா.

நிலவில் ஆய்வு மேற்கொண்டு வரும் சந்திரயான் 3 அங்கு மாக்மா கடல் இருந்ததை  கண்டுபிடித்துள்ளது. 

உருகும் பாறையின் பெரிய அடுக்குகளை மாக்மா கடல் என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். இந்த மாக்மா கடல் 4.3 மில்லியன் ஆண்டுகள் பழமையானது.  நிலவின் தென் துருவத்தில் ஒரு காலத்தில் ஒரு பெரிய மாக்மா கடல் இருந்திருக்கலாம் என்பதற்கான ஆதாரங்களை சந்திராயன்-3 ரோவர் பிரக்யான் கண்டறிந்து இருக்கிறது. சந்திர மண்ணின் அளவீடுகள் தொடர்பான ஆராய்ச்சி, பிரக்யான் ரோவரால் பதிவு செய்யப்பட்டு மேற்பரப்பில் 100 மீட்டர் பாதையில் பல புள்ளிகளில் எடுக்கப்பட்டது.

அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள ஆய்வாளர்கள் , நாசாவின் அப்பல்லோ மற்றும் சோவியத் யூனியனின் லூனா போன்ற முந்தைய செயற்கை கோள்களின் மண்ணின் ஆய்வுகளின் முடிவுகளையும் ஒப்பிட்டுள்ளது. 

சந்திரனின் தென் துருவத்தில் இருந்து வந்த பிரக்யானின் தரவை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், நிலவின் மண் ஒரே மாதிரியான பாறை வகையான  ஃபெரோன் அனார்த்தோசைட் அல்லது ஃபேன் ஆகியவற்றால் ஆனது என்று  கண்டறிந்தனர்.

மேலும், புவியியல் ரீதியாக தொலைதூர இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நிலவில் மாக்மா கடல் இருந்ததை உறுதி செய்கிறது, இது சந்திரனின் ஆரம்பகால பரிணாமத்திற்கு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சூழ்நிலையாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சந்திரனின் மேலோடு, மேன்டில் மற்றும் மையப்பகுதி எவ்வாறு உருவானது என்பதற்கான சாத்தியமான விளக்கங்களில் ஒன்றைக் காணலாம் .

கோள் உருவாவதற்கு முந்தைய நிலையில் சந்திரன் இரண்டு புரோட்டோ பிளானெட்டுகளுக்கு இடையேயான மோதலின் போது உருவானது. அதில் பெரிய கோள் பூமியாக மாறியது, சிறியது துணைக் கோள் சந்திரனாக மாறியது.

இதன் விளைவாக, சந்திரன் மிகவும் சூடாக மாறியது, அதன் மூலம், பாறைகள் முழு  மாக்மா கடலாக உருகுகிறது.

logo
Kalki Online
kalkionline.com