UPI மற்றும் Sim Card-ஐ தொடர்ந்து IT விதிகளிலும் மாற்றம்!

Changes in IT rules.
Changes in IT rules.

2024 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் சிம்கார்டு வாங்குவதற்கு புது விதிகள் கொண்டுவரப்பட்டது. பின்னர் UPI பணப்பரிமாற்ற விதிகளிலும் மத்திய அரசு மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதைத்தொடர்ந்து தற்போது 2021 ஆம் ஆண்டின் ஐடி விதிகளில் திருத்தம் கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

இந்த ஐடி விதி திருத்தங்கள் விரைவில் மினிஸ்ட்ரி ஆப் எலக்ட்ரானிக்ஸ் & ஐடி டெக்னாலஜியால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென IT விதிகளில் ஏன் திருத்தம் கொண்டு வரப்படுகிறது? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு மற்றும் Generative ஏஐ மாடல்களின் தன்மையை ஒழுங்குபடுத்துவதற்காக புதிய விதிகளை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக இந்த ஒழுங்குபடுத்ததலின் கீழ் மூன்று முக்கிய விதிகளை அரசாங்கம் கொண்டு வர உள்ளது. 

  1. முதலில் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தி இயந்திரங்களுக்கு தகவல்களை பயிற்றுவிக்கும் தளங்களில் எந்த சார்பும் இருக்கக்கூடாது. 

  2. அடுத்ததாக டீப் பேக் பயன்படுத்தி உருவாக்கும் கன்டெண்டுகளை சரிபார்த்து தடுப்பதற்கு புதிய விதிகளை அரசாங்கம் கொண்டு வரலாம். 

  3. இறுதியாக கடன் வழங்கும் செயலிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட உள்ளது. 

எல்லா பயனர்களும் இணைய வர்த்தக முறையில் சிறப்பாக செயல்பட பல மேம்படுத்தல்களை ரிசர்வ் வங்கி பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தலங்களுக்கு புதிய விதிகளையும் ஒழுகு முறைகளையும் அமல்படுத்தியது. இது முழுக்க முழுக்க இணைய பணப் பரிவர்த்தனையை பாதுகாப்பாக மக்கள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதையும் படியுங்கள்:
திருடப்பட்ட ஐபோனின் ஐடி, பாஸ்வோர்டை தந்திரமாக வாங்கும் ஹைடெக் திருடர்கள்!
Changes in IT rules.

இப்போது கொண்டு வரவிருக்கும் ஐடி விதிகள், மக்களை தவறாக சித்தரிக்கும் அல்லது மோசடி செய்யும் விதமாக நடக்கும் விஷயங்களை கட்டுப்படுத்தும் விதமாக கொண்டுவரப்படுகிறது. இதன் மூலமாக மக்கள் இணையத்தில் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க முடியும். மத்திய அரசின் இந்த புதிய ஐடி விதிகளை அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com