வெளியானது ChatGPT ஆண்ட்ராய்டு வெர்ஷன். 

வெளியானது ChatGPT ஆண்ட்ராய்டு வெர்ஷன். 

OpenAI நிறுவனம் ChatGPT-3.5 வெர்ஷனை, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்கின்றனர். இனி இதனால் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. 

GPT-3ன் மேம்படுத்தப்பட்ட பதிப்புதான் GPT-3.5. இதன் துல்லியத்தன்மை மனிதர்களைப் போலவே அனைத்தையும் புரிந்துகொண்டு உரையாடல் நிகழ்த்தும் செயற்கை நுண்ணறிவாகும். உலகம் முழுவதும் இணையத்தில் அடங்கியுள்ள டேட்டா பேஸ்களில் இருக்கும் தகவல்களை மனிதர்களை விட புத்திசாலித்தனமாகப் புரிந்துகொண்டு இதனால் உரையாட முடியும் என்பது கூடுதல் சிறப்பு எனலாம். உலகெங்கிலுமுள்ள எல்லா விதமான பயனர்களுக்கும் ஏற்ற வகையிலான விஷயங்களைப் புரிந்துகொண்டு, மிகவும் இயற்கையான முறையில் இந்த BOT-ஆல் செயல்பட முடியும். 

இதன் தற்போதைய சிறப்பு என்னவென்றால், இதுவரை ChatGPT-ஐ பிரவுசரில் மட்டுமே பயன்படுத்தும்படியாக இருந்து வந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களும் செயலி வடிவில் அதைப் பயன்படுத்தும் வகையில் OpenAI வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது ChatGPT பல கோடிக் கணக்கானப் பயனர்கள் அணுகக்கூடிய வகையில் மாற்றம் பெற்றுள்ளது. 

நீங்கள் அலுவலகத்தில் விடுப்பு எடுக்க வேண்டும் என்றாலோ அல்லது உங்களுக்கு உயர் மட்டத்தில் இருக்கும் நபருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் என்றாலோ சில நிமிடங்களிலேயே ChatGPT உதவியுடன் உங்களால் அதைச் செய்ய முடியும். மேலும் நீங்கள் எது தொடர்பான கேள்வி கேட்டாலும் உங்களுக்கான பதில்களை சிறப்பான முறையில் இந்த செயலி கொடுத்துவிடும். 

குறிப்பாக இந்தத் தொழில்நுட்பத்தை டிஜிட்டல் மீடியா கன்டெண்ட் கிரியேட்டர்கள் நன்றாகப் புரிந்து வைத்துள்ளனர். பதிவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவருமே இந்த ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கட்டுரைகள், வலைப்பதிவுகள் என அனைத்தையும் சிரமமின்றி உருவாக்குகின்றனர். 

ChatGPT ஆண்ட்ராய்டு மட்டும் iOS பதிப்பில் பல முக்கிய வேறுபாடுகள் உள்ளது. நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களால் தற்போது ChatGPT Plus சந்தா திட்டத்தில் சேர முடியாது. இதுவே நீங்கள் ஆப்பிள் பயனராக இருந்தால் மாதம் ரூ.1999 பிரீமியம் செலுத்தி அதன் Plus சந்தா திட்டத்தில் சேரலாம். 

எனவே ஆண்ட்ராய்டில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முற்றிலும் புதிய அனுபவத்தை அனைவரும் பெற்று வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com