வெறும் ₹199-க்குள் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கும் 10 கேட்ஜெட்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

Cheap and Best Gadgets under ₹200
Gadgets
Published on

ரூபாய் 200-க்குள் கிடைக்கும் கேட்ஜெட்களில் கேபிள் ப்ரொடெக்டர்கள், கீ செயின் லைட்டுகள், சிறிய USB லைட்டுகள், மொபைல் ஸ்டாண்டுகள், கேபிள் ஆர்கனைசர்கள் மற்றும் சிறிய காட்ஜெட் ஆக்சஸரீஸ்கள் போன்றவை கிடைக்கும். இவை பெரும்பாலும் ஆன்லைன் தளங்களானா அமேசான் போன்றவற்றில் கிடைக்கின்றன.

1) கேபிள் ப்ரொடெக்டர்கள் (Cable Protectors):

சார்ஜர் மற்றும் ஹெட்ஃபோன் கேபிள்கள் அறுந்து போகாமல் பாதுகாக்க உதவும் ஸ்பைரல் கேபிள் கவர்ஸ்.

2) Mini USB ஃபேன் / லைட்:

லேப்டாப் அல்லது பவர் பேங்கில் இணைத்து பயன்படுத்தக்கூடிய சிறிய ஃபேன் அல்லது LED லைட்டுகள்.

3) கேபிள் ஆர்கனைசர் (Cable Organizer):

அதிகப்படியான கேபிள்களை சுருட்டி வைக்க உதவும் கிளிப்புகள்.

4) மொபைல் ஸ்டாண்டுகள் (Mobile stands):

போனை வைத்து வீடியோ பார்க்க உதவும் வகையில் சிறிய, மடிக்கக்கூடிய ஸ்டாண்டுகள்.

5) போன் ஸ்கிரீன் ப்ரொடக்டர் (Screen Protector) / டெம்ப்பர்ட் கிளாஸ்:

பழைய மாடல் போன்களுக்கு அல்லது பட்ஜெட் போன்களுக்கு உதவும் போன் ஸ்கிரீன் ப்ரொடெக்டர்.

6) மல்டி ஃபங்ஷனல் கீ செயின் லைட் (Multifunctional keychain light):

சிறிய ஆனால் பிரகாசமான LED லைட் மற்றும் பல செயல்பாடுகள் கொண்ட கீ செயின் லைட்டுகள். யு எஸ் பி டைப் சி சார்ஜரைக் கொண்டு நம்மால் இதனை சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும் இதில் ஒரு காந்தமும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கதவுகளில் இதனை எளிதாக பொருத்தி வைக்க முடியும். பாட்டில்களை திறக்க உதவும் பாட்டில் ஓப்பனராகவும் இதனை பயன்படுத்தலாம்.

7) பைல் ஹோல்டர் ரிங் (Mobile Holder Ring):

மொபைல்களை எளிதாக பிடிக்க உதவும் ரிங் ஹோல்டர்கள்.

8) Car / Bike gadgets:

சிறிய LED லைட்டுகள் அல்லது நம்பர் பிளேட் ஃபிரேம்கள்.

9) புளூடூத் டிராக்கர்கள் (Bluetooth Trackers):

ப்ளூடூத் 4.0 ஆன்ட்டி லாஸ்ட் டிவைஸ் ஆனது மற்றொரு பயனுள்ள கருவியாகும். இதனைப் பயன்படுத்தி டிராக் செய்ய உதவுகிறது. இரண்டு ஆண்ட்ராய்டு டிவைட்களில் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கீ செயினில் கூட இதனை எளிதாக பொறுத்திக் கொள்ள முடியும். இதன் பேட்டரியை எளிதாக மாற்றுவதற்கும் இதில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

10) கீபோர்டு கிளீனிங் கிட் (keyboard cleaning kit):

லேப்டாப் கீபோர்டு, இயர்ஃபோன் போன்றவற்றை சுத்தம் செய்ய உதவும் பிரஷ், டஸ்டர், கீ-கேப் புல்லர் கொண்ட கிட்.

இந்த பொருட்கள் அனைத்தும் அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இவை பெரும்பாலும் தள்ளுபடியிலும் கிடைக்கின்றன. இவற்றை அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் 'Gadgets under 200' என்று தேடினால் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com