சீனாவின் செயற்கை சூரியன் பற்றிய உண்மைகள்!

China's artificial sun.
China's artificial sun.

ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் செயற்கை சூரியனை உருவாக்கி வரும் நிலையில் தற்போது அந்த முயற்சியில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், சீனா உருவாக்க திட்டமிட்டுள்ள செயற்கை சூரியன் நிஜ சூரியனை விட 7 மடங்கு அதிக வெப்பத்தை வெளியிடும் என சொல்லப்படுகிறது.

சீனாவின் இந்த செயற்கை சூரியனை வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் தயாரித்து முழுமை பெறச்செய்ய சீனா முயற்சி செய்து வருகிறது. சீனா தயாரிக்கும் இந்த செயற்கை சூரியன் அணுக்கரு இணைவை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது இயற்பியலில் நியூக்ளியர் ஃபியூஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயற்கை சூரியனை சீனா உருவாக்க முயற்சித்து வருகிறது. 

தற்போது உலகம் முழுவதும் எரிசக்தி சவால்கள் அதிகம் இருப்பதால், பலவிதமான முன்னேற்பாடுகளை உலக நாடுகள் செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக இயற்கை ஆற்றலை பயன்படுத்தி எரிசக்தி உருவாக்கும் தொழில்நுட்பங்களுக்கு உலக நாடுகள் மாறி வருகிறது. இத்தகைய சவால்களுக்கு இந்த செயற்கை சூரியன் தீர்வை அளிக்கும் என சீனா நம்புகிறது. 

இதற்காக சீனா தயாரிக்கும் அணு உலை 2035 ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும். CNNC என்ற சீன அரசு நிறுவனம் செயற்கை சூரியனை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதே நேரம் உலக நாடுகளில் மிகப் பிரபலமான அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகள் இதில் மும்மரமாக இறங்கி உள்ளனர். இந்த போலி சூரியனின் முன்மாதிரி 2035 ஆம் ஆண்டுக்குள் உருவாக்கி, 2050 ஆம் ஆண்டுக்குள் இதை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:
காலநிலை மாற்றத்தில் இருந்து பாதுகாக்க பொருளாதார ரீதியாக உதவும் இந்தியா, சீனா!
China's artificial sun.

இதே காரணங்களுக்காக அமெரிக்காவும் செயற்கை சூரியனை உருவாக்க தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் இப்போது சீனாவும் இந்த முயற்சியில் இறங்கி இருப்பது உலக நாடுகளின் கவனத்தை அவர்கள் பக்கம் திருப்பியுள்ளது. இந்த முயற்சி பூமிக்கு சாதகமாக அமையுமா? அல்லது மிகப் பெரிய பாதகத்தை விளைவிக்குமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இதுவரை சீனா எத்தனையோ விஷயங்களை போலியாக தயாரித்த நிலையில், தற்போது சூரியனையே போலியாக தயாரிக்கப் போகிறார்கள் என்ற செய்தி மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com