சீனாவின் குறைந்த விலை மீத்தேன் ராக்கெட்!

China's low-cost methane rocket.
China's low-cost methane rocket.

சீனாவின் பிரபலமான லேண்ட்ஸ்பேஸ் நிறுவனமானது மீத்தேன் மற்றும் திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு தயாராகியுள்ளது. 

தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பொறுத்தவரை சீனா எப்போதுமே மற்ற நாடுகளை விட முன்னோடியாகத் திகழும். அவர்களின் தொலைநோக்குப் பார்வை எப்போதுமே பல ஆண்டுகள் முன்னோக்கியே இருக்கும். மேலும் விண்வெளி சார்ந்த விஷயங்களிலும் சிறந்து விளங்கும் சீனா, குறைந்த விலை மற்றும் நிலத்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் வகையில் மீத்தேன் மூலம் இயங்கும் ராக்கெட்டை உருவாக்கியுள்ளனர். இது ஒரு முக்கிய வணிக சோதனையாக பார்க்கப்படுகிறது.

ஜூக் 2 கேரியர் என பெயரிடப்பட்ட இந்த ராக்கெட் சமீபத்தில் கோபி பாலைவனத்தில் உள்ள ஏவு தளத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிலிருந்தே இந்த ராக்கெட் எப்போது ஏவப்படும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் உருவாகியுள்ளது. 

இந்த ராக்கெட்டின் திறனை சரிபார்க்கும் நோக்கத்தில் ஒய்3 என்ற திட்டத்தின் கீழ் சோதனை ஏவுதல் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து சீனா பெரிதாக விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், இதைப் பற்றி உலக நாடுகளும், தொழில்துறையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இத்திட்டத்திற்காக லேண்ட்ஸ்பேஸ் நிறுவனம் மூன்று சோதனை ஏவுதல்கள் செய்ய திட்டமிட்டுள்ளது. இது y1, y2, y3 என்ற மூன்று சோதனை ஏவுதல்கள் மூலமாக சோதனை செய்யப்பட உள்ளது.

உலகில் ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ப்ளூ அர்ஜின் போன்ற உலகளாவிய நிறுவனங்கள் மீத்தேன் மூலமாக ராக்கெட் ஏவும் சாதனையை செய்திருந்தாலும், அவர்களின் தொழில்நுட்பங்களை விட சீனாவின் தொழில்நுட்பம் முன்னணியில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவர்களுடைய சோதனை ஓட்டங்களில் சில சவால்களும் இருந்துள்ளதால், அதன் விவரங்களை சீனா வெளியிடவில்லை. 

இதையும் படியுங்கள்:
சந்திரயான்3 வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சீனா!
China's low-cost methane rocket.

இருப்பினும் தற்போது செயல்படுத்தப்பட உள்ள ஜூக் 2 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவ லேண்ட்ஸ்பேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 2024 மேலும் 3 ஏவுகணைகளை ஏவவும், 2025 ஆம் ஆண்டில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com