Circle to Search: இனி குரோமிலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்! 

Circle to Search
Circle to Search

சமீபத்தில் வெளியான சாம்சங் எஸ்24 சீரியஸ் ஸ்மார்ட்போனில் பிரபலமான Circle to Search அம்சத்தை குரோம் பிரவுசரில் வழங்க google தயாராகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 

AI ஆதரவு கொண்ட Circle to Search என்ற அம்சமானது, பயனர்கள் தங்களது திரையில் வரும் கண்டென்ட்டை வட்டமிட்டு எளிதாக சர்ச் செய்யும் ஒரு முறையாகும். அதாவது நீங்கள் திரையில் ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், கூகுளில் சென்று அதன் பெயரை போட்டு தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் பார்ப்பதை அப்படியே வட்டமிட்டால், அது என்னவென்று தானாக google தேடி கண்டுபிடித்து சொல்லிவிடும். 

இந்நிலையில் இந்த அம்சம் google chrome பிரவுசரில் உள்ள லென்சில் மேம்படுத்தப்பட உள்ளது. கூகுள் லென்ஸ் என்பது புகைப்படங்களை பயன்படுத்தி தேடும் ஒரு அம்சமாகும். இனி குரோமில் இருக்கும் லென்ஸ் UI, ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருப்பது போலவே Circle to search என்ற புதிய அனிமேஷனை காண்பிக்கும். அதைப் பயன்படுத்தி புகைப்படத்தில் உள்ள குறிப்பிட்ட விஷயங்களையும் நாம் எளிதாகத் தேடலாம். 

எனவே இப்போதே உங்களது குரோம் பிரவுசரை அப்டேட் செய்யுங்கள். இந்த அப்டேட் உண்மையிலேயே பயனர்களுக்கு பெரிதளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, டெஸ்க்டாப்பில் இந்த அம்சத்தை எளிதாக பயன்படுத்தும் வகையில், வட்டமிடுவதற்கு பதிலாக ரெக்டாங்கிள் செலக்சன் இணைக்கப்பட உள்ளது. அதாவது கர்சரை அழுத்திப் பிடித்து, நீங்கள் ஒரு கட்டத்தை உருவாக்கி, அதன் உள்ளே இருக்கும் விஷயங்களை எளிதாக தேடலாம். 

இதையும் படியுங்கள்:
இனி Google சாப்டர் கிளோஸ்... புதிய சர்ச் என்ஜினை அறிமுகம் செய்யும் OpenAI!
Circle to Search

இது எப்போது அனைவரும் பயன்படுத்தும் வகையில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது பயனர்களின் வசதியை கருத்தில் கொண்டு இப்படி பல அம்சங்களை வெளியிட்டு வரும் google, எதிர்காலத்தில் மேலும் பல புதிய மாற்றங்களை இதில் கொண்டுவரும் என்று கூறுகின்றனர். 

இப்போதைக்கு chrome பிரவுசரில் இந்த அம்சம் வரவிருப்பது பயனர்களுக்கு பெரிதளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com